பிரபல ஆன்மிகவாதியான நித்தியானந்தா இறந்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், நேரலையில் தோன்றிப் பேசுவார் என்று கைலாசா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என்று அவரின் சகோதரி மகன் வீடியோவில் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்தத் தகவல்களை கைலாசா நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் வெளியிட்டுள்ள பதிவில், ’’நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்!

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது. இனிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார்.

நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: ஏப்ரல் 2, 2025 | 7PM ET. இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசுவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா உயிருடன் தான் இருக்கிறார் என்று இன்று அதிகாலை கைலாசா நிர்வாகம் வெளியிட்ட வீடியோ, பழைய காணொலி என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய லைவ் வீடியோவில் உண்மையாகவே அவர் தோன்றிப் பேசுவாரா அல்லது நித்தியானந்தாவின் பழைய காணொலி வெளியிடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.