திருச்சியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள 122 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசுப் பணிக்காக காத்திருக்கும் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணியிடங்கள்?

உதவிப் பேராசிரியர் (Assistant Professor Grade I & II), இணைப் பேராசிரியர் (Associate Professor) மற்றும் பேராசிரியர் (Professor) என மொத்தம் 122 காலிப்பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் பிஎச்டி முடித்திருப்பது கட்டாயமாகும். மேலும், விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் இதோ

தகுதியான தேர்வர்கள் திருச்சி என்.ஐ.டி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nitt.edu என்ற முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மார்ச் 6-ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 6, 2026 ஆகும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, தேவையான கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தபால், ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் திருச்சி என்.ஐ.டி அலுவலகத்திற்குச் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப்பிரிவு, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்கள் மற்றும் தேர்வு முறை குறித்த தகவல்களை அறிய https://www.nitt.edu/home/other/jobs/faculty_recruitment_2026/ என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.