Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?

1 month ago 7
ARTICLE AD

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று நிசான். நிசான் நிறுவனத்திற்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. நிசான் நிறுவனத்தின் கார்களை பலரும் விரும்பி வாங்கும் நிலையில், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக நிசானும் தனது புதிய காரை களமிறக்க உள்ளது.

Nissan Tekton:

நிசான் தனது Nissan Tekton காரை வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். இந்த கார் 3 டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர், 1.3 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் ஹைப்ரிட் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக இந்த கார் உருவாகி வருகிறது.

விலை எவ்வளவு?

நவீன வசதிகளுடனும், உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 18 லட்சம் ஆகும். இந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புகள்:

இதன் முன்பக்கம் கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. எல் வடிவ எல்இடி முகப்பு விளக்குகள், வைட் ஆர்ம் டேம், ஸ்கிட் ப்ளேட் பொருத்தப்பட உள்ளது. 18 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் காராக இந்த கார் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதனால், இந்த காரின் விற்பனை அதிகளவு இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இதில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது. சன்ரூஃப், வென்டிலேடேட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  லெவல் 2 அடாஸ் வசதியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்ஜின்:

1.0 லிட்டர், 1.3 லிட்டர் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளதால் 1000 சிசி, 1300 சிசி மற்றும் 1800 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல டார்க் இழுதிறனும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த கார் சந்தையில் அறிமுகமானால் ஹுண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விதாரா, டொயோட்டோ அர்பன் க்ரூசர் ஹைட்ரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது. நியூ ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாக கொண்டு இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

Read Entire Article