NIRF Ranking 2024: டாப் 100 பொறியியல் கல்லூரிகள்; தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளுக்கு இடம்?- முழு பட்டியல் இதோ!

1 year ago 7
ARTICLE AD

மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும்  தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework)  என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதில் தொடர்ந்து 6-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.

இந்த நிலையில் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள டாப் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் இருந்து 14 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முழு பட்டியல் இதோ..!

கல்லூரி பெயர் - தரவரிசையில் பெற்றுள்ள இடம்

ஐஐடி சென்னை - 1

என்ஐடி திருச்சி - 9

விஐடி வேலூர்- 11

எஸ்.ஆர்.எம். கல்லூரி (S.R.M. Institute of Science and Technology), சென்னை - 13

அண்ணா பல்கலைக்கழகம் - 14

அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோவை – 23

கலசலிங்கம் கல்லூரி (Kalasalingam Academy of Research and Education), ஸ்ரீவில்லிப்புத்தூர் - 36

சாஸ்திரா பல்கலைக்கழகம் (Shanmugha Arts Science Technology & Research Academy), தஞ்சாவூர் - 38

எஸ்.எஸ்.என். கல்லூரி (Sri Sivasubramaniya Nadar College of Engineering), காலவாக்கம் -  46

சவீதா கல்லூரி (Saveetha Institute of Medical and Technical Sciences), சென்னை – 64

சத்யபாமா கல்லூரி (Sathyabama Institute of Science and Technology), சென்னை - 66

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) , கோவை - 67

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி (Sri Krishna College of Engineering and Technology), கோவை – 83

வேல் டெக் கல்லூரி (Vel Tech Rangarajan Dr.Sagunthala R & D Institute of Science and Technology), சென்னை - 86

இதில் கடந்த ஆண்டு இடம்பெற்று இருந்த சென்னை, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இந்த முறை டாப் 100 இடத்தை இழந்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு:  https://www.nirfindia.org/

முழு தரவரிசைப் பட்டியலையும் காண:

Read Entire Article