Nipah virus: கேரளத்தில் நிபா வைரஸ் நோய் பாதிப்பால் சிறுவன் மரணம்; மத்திய அரசு தெரிவித்தது என்ன?

1 year ago 7
ARTICLE AD

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் பெரிந்தல்மன்னாவில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோழிக்கோட்டில் உள்ள உயர் சுகாதார மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அவரது ரத்த மாதிரிகள், புனேயில் உள்ள என்ஐவிக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து,  நிபா வைரஸ் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தசிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.

சுற்றுப்புறங்களில் ஆய்வு:

இந்நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டவரின்  குடும்பம், சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளும் பணியை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதனையடுத்து  பின்வரும் உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது:

கடந்த 12 நாட்களில், தொற்று பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்களை கண்டறிதல்

கடுமையாக தனிமைப்படுத்துதல் மற்றும் சந்தேக நபர்களை தனிமைப்படுத்துதல்.

ஆய்வகப் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.

கட்டுப்பாட்டுக் குழு:

இந்த விஷயத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் மாநிலத்திற்கு ஆதரவளிக்க மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய 'ஒரே சுகாதார இயக்கத்திலிருந்து' பல உறுப்பினர் கூட்டு நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக் குழு நிறுத்தப்படும்.

கடந்த காலங்களில் கேரளாவில் நிபா வைரஸ் நோய்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மிக அண்மையில் 2023 இல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்பட்டது. பழ வெளவால்கள் வைரஸின் ஆதாரமாகும்.  மேலும் தற்செயலாக வௌவால் கடித்த   பழங்களை உட்கொள்வதன் மூலம் மனிதர்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது

அறிகுறிகள் என்ன?

நிபா வைரஸின் அறிகுறிகள் பொதுவாக 4-14 நாட்களுக்குள் தோன்றும். சுவாச பிரச்சனைகள், காய்ச்சல், தலைவரி, இருமல், வாந்தி, மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் வலிப்பு கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா தொற்று நோயாளிகளின் இறப்பு 40 சதவீத முதல் 75 சதவீதம் வரை உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

நிபா வைரஸ் என்பது ஒருவரிடம் இருந்து ஒருவரை தொடுதல் மூலமாக எளிதில் பரவக்கூடிய அபாயங்கள் இருக்கிறது.  நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த வைரஸ் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளும், பிரத்யேக மருந்தும் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நோயாளியிடம் இருந்து இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக சோப்புகளால் அடிக்கடி சுத்தம் செய்வது, முகக் கவசம் அணிவது மிகவும் முக்கியம்.  இந்த வைரசை மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி மாதிரிகளில் இருந்தும், ரத்தம் மற்றும் சிறுநீரில் இருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article