New CJI: வழக்கறிஞர்களின் Favourite.. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. யார் இந்த சூர்யா காந்த்?

1 month ago 4
ARTICLE AD

தலைமை நீதிபதி கவாயின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி:

நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சூர்யா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரையின் பேரில் அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைமை நீதிபதி கவாய் நவம்பர் 23 அன்று ஓய்வு பெற உள்ளார்.  இதனை தொடர்ந்து, நீதிபதி சூர்யா காந்த் நவம்பர் 24 அன்று தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். அவரது பதவிக்காலமானது  2027 பிப்ரவரி 9 வரை சுமார் 15 மாதங்கள் அந்தப் பதவியில் தொடர்வார். ஹரியானாவிலிருந்து வரும் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையையும் சூர்யா காந்த் பெறுகிறார்.

சூர்யா காந்தின் பயணம்

பிப்ரவரி 10, 1962 அன்று ஹரியானாவின் ஹிசாரில் பிறந்த சூர்யா காந்த், ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். சட்டத்துறையில் சிறந்து விளங்கிய அவர், 2000-ஆம் ஆண்டு ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

2004-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2018-ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார். பின்னர், 2019 மே 24 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்.

மென்மையான அணுகுமுறையால் பிரபலமானவர்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள நீதிபதி சூர்யா காந்த், தாராளமான மற்றும் மனிதநேய பார்வைக்காக நீதித்துறையில் தனித்தன்மை பெற்றவர்.

அவரது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு முழு வாய்ப்பும் வழங்கப்படுவதாகவும், சிறிய வழக்குகள் கூட ஆழமாகக் கேட்டு தீர்வளிப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயிடம் காலணியை வீசிய வழக்கறிஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப மறுத்து, “இதை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறிய அவரது முடிவு, நீதித்துறையில் பெருந்தன்மையின் எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

முக்கிய வழக்குகள்

பீகார் SIR (தேர்தல் பட்டியல் திருத்தம்), சிவசேனா தேர்தல் சின்னம் தகராறு, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுதல் மற்றும் டிஜிட்டல் கைதுகள் உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளை அவர் உச்ச நீதிமன்றத்தில் விசாரித்துள்ளார்.

Read Entire Article