Nepal Protest: 14 அப்பாவிகளை சுட்டுக்கொலை செய்த ராணுவம்.. பற்றி எரியும் நேபாளம்!

3 months ago 5
ARTICLE AD

Nepal Protest: இந்தியாவின் அண்டை நாடாக நேபாளம் நாட்டில் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதாவது, நேபாள நாட்டில் இயங்கும் அனைத்து தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்த நாட்டின் பிரதமர் கேபி சர்மா உத்தரவு பிறப்பித்தார்.

இளைஞர்கள் போராட்டம்:

நேபாள அரசு விதித்த காலக்கெடுவிற்குள் பதிவு செய்யாத சமூக வலைதள நிறுவனங்களை நேபாளத்திற்கு தடை செய்வதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது. பிரதமரின் இந்த உத்தரவால் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூ டியூப் உள்பட 26 சமூக வலைதளங்களை தடைவிதிப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது.

இது அந்த நாட்டு இளைஞர்கள் உள்பட அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்பு கொள்வது, தொழில் உள்பட பலவற்றிற்கும் சமூக வலைதளங்கள் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில், பிரதமரின் அறிவிப்பால் அந்த நாட்டு இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

14 பேர் சுட்டுக்கொலை:

அவர்கள் இன்று காத்மாண்டுவில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த நேபாள ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டு வீசினார். ஆனாலும், பல்லாயிரக்கணக்கில் குவிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது நேபாள ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளான பலரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

துப்பாக்கி குண்டுகள்:

அந்த நாட்டில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போராட்டக்காரர்கள்7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நெஞ்சிலும், தலையிலும் துப்பாக்கி குண்டுகள் தாக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் உடலில் குண்டு தாக்கிய காயத்துடன் அனுமதியாகியுள்ளனர்.

அந்த நாட்டில் உள்ள பனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் பலரும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காத்மாண்டு மட்டுமின்றி அந்த நாட்டில் உள்ள பல நகரங்களிலும் இந்த போராட்டம் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக, 2 கே கிட்ஸ் உள்ளிட்ட இளைஞர்கள்தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்ச்சியிலும், சோகத்திலும் நேபாளம்:

நேபாளத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டில் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அதன்பின்னர், தற்போது இப்போது அந்த நாட்டில் இப்படியொரு போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நேபாள ராணுவம், போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் உள்ளிட்ட பலவற்றை சில இடங்களில் பின்பற்றி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஒட்டுமொத்த நேபாளமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Read Entire Article