தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகியது. பிரபுதேவா , பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, மீனாக்‌ஷி செளத்ரி, வைபவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை த்ரிஷா இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தி கோட் வசூல்

தி கோட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை ஒருபக்கம் கொண்டாடி வரும் நிலையில் விமர்சகர்கள் வெங்கட் பிரபுவின் தனித்துவம் இப்படத்தில் இல்லாமல் முழுக்க முழுக்க விஜய் படமாக மட்டுமே இருப்பது ஒரு குறையாக தெரிவித்துள்ளார்கள். வசூல் ரீதியாக தி கோட் இதுவரை உலகளவில் நான்கு நாட்களில் 288 கோடி வசூலித்ததாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி ஒருவார காலம் கடந்துள்ள நிலையில் படம் 300 கோடி வசூலை கடந்துள்ளது.

தி கோட் பார்த்து நயன்தாரா ரியாக்‌ஷன்

தி கோட் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒரு அம்சம் என்றால் இப்படத்தில் நடித்த நடிகர்களைச் சொல்லலாம். 90 களில் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா, லைலா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதில் சினேகா தந்தை விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சினேகா விஜய் இருவருக்கும் வசீகரா படத்தில் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. இப்படத்தைத் தொடர்ந்து தி கோட் படத்திலும் இருவருக்குமான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

"#Nayanthara mam was the first choice of #Sneha mam😳. Nayanthara mam called me after watching movie and said 'There is no better choice than sneha & you have done right thing❣️. Thank God you put Sneha. The movie was very nice' "- VP#TheGreatestOfAllTime pic.twitter.com/Aelesg8CGT

— AmuthaBharathi (@CinemaWithAB) September 11, 2024

சினேகாவிற்கு பதிலாக இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க தான் நினைத்ததாக படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இத்துடன் தி கோட் படத்தைப் பார்த்த நயன்தாரா தனக்கு ஃபோன் செய்து சினேகாவின் நடிப்பை பாராட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு “இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஆனால் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் தி கோட் படத்தைப் பார்த்து நயன்தாரா மேடம் எனக்கு கால் பண்ணதுதான். இப்படத்திற்கு சினேகாவை நடிக்க வைத்தது தான் சிறந்த முடிவு என்று படத்தில் அவர் சிறப்பாக நடித்திருப்பதாக நயன்தாரா கூறினார்” எனத் தெரிவித்தார்.