Namo Bharat Train: நமோ பாரத் ரயில் சேவையால் டெல்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரம் வெறும் 55 நிமிடங்களாக குறைந்துள்ளது.

நமோ பாரத் ரயில் சேவை:

டெல்லி-மீரட் இடையேயான நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) முழுவதும் இணைப்பை வலுப்படுத்துவதில் இந்த திட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 82.15 கிலோமீட்டர் நீளத்திற்கான வழித்தடமானது டெல்லியில் உள்ள சராய் காலே கான் மற்றும் மீரட்டில் உள்ள மோடிபுரம் பகுதியை சுமார் 55 நிமிடங்களில் அடைய வழிவகை செய்கிறது. இதன்மூலம் பயண நேரம் வெகுவாகக் குறைவதோடு, டெல்லிக்கும் மேற்கு உத்தரபிரதேசத்திற்கும் இடையிலான நெரிசலை கணிசமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட விவரங்கள்:

கிட்டத்தட்ட 70 கி.மீ உயரமான பாதையையும் சுமார் 12 கி.மீ பூமிக்கு அடியிலான பாதையையும் உள்ளடக்கி இந்த வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் இறுதி வடிவம் பெற்றுள்ள திட்டமானது, தேசிய தலைநகரை சுற்றிய பகுதிகளில் தினசரி பயனத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு பயணத்திற்கான கட்டணம் 213 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோமீட்டருக்கு தோராயமாக ₹2.60 என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8, 2019 அன்று பிரதமர் மோடி இந்த விரைவு ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அக்டோபர் 2023ம் ஆண்டில் 17 கிமீ தூரம் வரை முடிவுற்று இருந்த வழித்தடம் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக விரிவாக்கங்கள் மூலம் இந்த வழித்தடம் தற்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நமோ பாரத் ரயிலானது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

🚨 Metro Rail and Namo Bharat Rapid Rail in Meerut, Uttar Pradesh. 🔥

(📹-@DetoxTravellerr) pic.twitter.com/WgsdyqMvSt

— Indian Tech & Infra (@IndianTechGuide) February 22, 2026

மீரட் மெட்ரோ ரயில் சேவை:

நமோ பாரத் வழித்தடத்துடன், நகரின் ஒருங்கிணைந்த போக்குவரத்து நெட்வொர்க்காக இருக்கும் மீரட் மெட்ரோவையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மீரட் தெற்கு மற்றும் மோடிபுரம் இடையே சுமார் 23 கி.மீ நீளம் கொண்ட இந்த மெட்ரோ பாதை, 13 நிலையங்களை கொண்டுள்ளது. நாட்டிலேயே அதிவேக மெட்ரோ ரயில் சேவையாகக் கருதப்படும் மீரட் மெட்ரோ, மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லும். ஒவ்வொரு ரயிலிலும் 173 பயணிகள் அமரக்கூடிய மூன்று பெட்டிகள் மற்றும் மொத்தம் 700 பயணிகள் பயணிக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

இந்த அமைப்பில் ஒருங்கிணைந்த டிக்கெட்டிங் வசதி உள்ளது, இதனால் பயணிகள் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ இரண்டிலும் ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணிக்க முடியும். இரண்டு சேவைகளும் நகரத்திற்குள் ஒருசேர அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பில் இயங்குகின்றன. இத்தகைய போக்குவரத்து அமைப்பை ற்றுக்கொள்ளும் சில நகரங்களில் ஒன்றாக மீரர் உருவெடுத்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:

மீரட் மெட்ரோ ரயில் நிலையத்தில் புஷ்-பட்டன் கதவுகள், அவசரகால அலாரங்கள் மற்றும் ப்ளாட்ஃபார்ம் திரை கதவுகள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு என இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலையங்கள் எளிய அணுகலைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. லிஃப்ட், ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளுக்கான நியமிக்கப்பட்ட இடங்கள் மற்றும் வயதான பயணிகளுக்கு, குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்காக டெல்லிக்கு பயணிப்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படுவதால், இந்த வழித்தடம் நெடுஞ்சாலை நெரிசலைக் குறைக்கும், டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் முழுவதும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.