விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் முத்துக்காளை. 'காதலன்' படத்தில் நடிக்க துவங்கி, பொன்மனம், என் உயிர் நீ தானே, தவசி, யூத், ஆல்பம், அன்பே சிவம், மொழி, சிவாஜி, கிக், சந்திரமுகி 2, இந்த கிரைம் தப்பில்ல, ரத்னம், மத கஜ ராஜா, ஒத்த வீட்டு முத்தையா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் வடிவேலு உடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்த முத்துக்காளை, அதன் பிறகு வடிவேலு உடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கினார். இதில், செத்து செத்து விளையாடுவோமா என்ற காமெடி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

சினிமாவிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே போன்று படிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் முத்துக்காளை. கல்விக்கு வயது தடையில்லை என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். 2017ல் வரலாறு பாடத்தில் பிஏ டிகிரி முடித்த முத்துக்காளை, தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார்.

அப்படி தொடர்ந்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முத்துகாளைக்கு அவரின் மகன் வாசன் முரளி தற்போது பெருமை சேர்க்கும் விதத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் எடுத்துள்ளார். அதன்படி, 438 மதிப்பெண்கள் எடுத்து அசத்தி இருக்கிறார். இதை தொடர்ந்து, தன்னுடைய மகனுக்கு... அவருக்கு மிகவும் பிடித்த பால்கோவாவை வாங்கி கொடுத்து இந்த மகிழ்ச்சியான விஷயத்தை முத்துக்காளை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.