இயக்குநர் முத்தையா

சசிகுமார் நடித்த குட்டி புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. தொடர்ந்து கொம்பன் , மருது , கொடிவீரன் , மருது , தேவராட்டம் , புலிகுத்தி பாண்டியன் , விருமண் , காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கொம்பன் , மருது ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. முத்தையா இயக்கிய பெரும்பாலான படங்களின் கதை ராஜபாளையத்தை கதைக்களமாக கொண்டவை. ஆக்‌ஷன் , காமெடி , குடும்ப செண்டிமென் என ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் முத்தையாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தேவர் மகன் படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னேன்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் முத்தையா “ ஆனால் நான் ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகன். பாயும் புலி என்று எங்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. அதில் நான் செயலாளர். அதேபோல் ரஜினியின் ராகவேந்திரா படம் வெளியானபோது மன்றத்தின் பெயரை அப்படியே மாற்றிவிடுவோம். கமலின் தேவர்மகன் படம் வெளியான அதே சமயத்தில் தான் ரஜினின் பாண்டியன் படமும் வெளியானது. காலையில் சீக்கிரமாகவே பாண்டியன்படத்திற்கு சென்றுவிட்டோம். படம் நன்றாக இல்லை. ஆனால் ரஜினி படத்தை விட்டுக் கொடுக்க முடியாதே . அதனால் படம் சூப்பராக இருக்கிறது என்று எல்லாரிடம் சொன்னேன். அப்போது ரஜினிக்கு போட்டி என்றால் கமல்தான். அதனால் கமலின் தேவர் மகன் படத்தையும் பார்த்துவிட்டு வந்தேன். படம் நல்லாவே இல்லை குப்பை என்று எல்லாரிடமும் சொல்லிவிட்டேன். நான் இந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் நான் அவர்களை பெருமையாக பேசும் வகையில் தான் படம் எடுக்கிறேன் என்று சொகிறாரகள். ஆனால் நான் படம் எடுக்கும்போது எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு தெரிஞ்சது ரஜினி படம் மட்டும்தான்” என்று என்று முத்தையா இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

"All r saying that I'm a caste(Devar) based filmmaker meanwhile when Pandian &DevarMagan released I went to PandianFDFS as I'm a Rajini fan nd aftr watching DevarMagan i said that DM is not Good😂 For me Rajini sir is important" (Rephrased)

-Dir Muthaiya😂🔥#Vettaiyan #Coolie pic.twitter.com/BCqQl1nE4c

— R͏A͏T͏H͏E͏E͏S͏H͏ R͏A͏J͏I͏N͏I͏ ॐ+†+☪=🤘 (@realrawrathesh1) July 21, 2024

மேலும் படிக்க : S J Suryah : மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே சூர்யா..படம் ரிலீஸ் எப்போ தெரியுமா