munnar: 2025-ல் ஆசியாவின் சிறந்த கிராமப்புற ஓய்விடம்! இயற்கை ரம்மியத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பு!

5 months ago 15
ARTICLE AD

கேரளாவின் பிரபல மலையோர சுற்றுலா தலமான மூணாறு, 2025ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த கிராமப்புற ஓய்விடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. தேயிலைத் தோட்டங்கள், பனிமூடிய பள்ளத்தாக்குகள், குளிர்ச்சியான வானிலை ஆகியவற்றால் பிரபலமான மூணாறு, இயற்கையை நேசிப்பவர்களுக்கும் நகர கூட்டத்திலிருந்து விலகி அமைதியான பயணத்தை விரும்புபவர்களுக்கும் நீண்டகாலமாக முதன்மையான தலமாக இருந்து வருகிறது.

சமீபத்திய அறிக்கை ஒன்றில், ஆசியாவில் சிறந்த எட்டு கிராமப்புற சுற்றுலா தலங்களில் மூணாறு இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் மூணாறு சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் மீண்டும் ஒரு தடம் பதித்துள்ளது. இயற்கையின் அழகு, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, கூட்டம் குறைந்த சூழல் ஆகியவை மூணாரை தனித்துவப்படுத்தும் அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு, பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், காடுகள் சூழ்ந்த மலைகள், அருவிகள் என பல்வேறு இயற்கை அழகுகளால் கவர்கிறது. மெதுவான பயணத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அல்லாமல், டிரெக்கிங், பறவைகள் பார்வை, படகு சவாரி போன்ற வெளிப்புறச் சாகசங்களுக்கும் மூணாறு சிறந்த இடமாகும். மூணாரின் மற்றொரு தனிச்சிறப்பு நீலகுறிஞ்சி மலர். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்ந்து மலைகளை நீல நிறமாக மாற்றுகிறது.

இயற்கையான சுற்றுச்சூழலுடன் காணப்படும் கேரள மாநிலம் ' கடவுளின் சொந்த நாடு' என பெருமையுடன் அழைக்கப்படுகிறது. அதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் ரம்யமான சுற்றுச் சூழல் ஆகியவற்றுடன் உலகளாவிய சுற்றுலா ' ஹாட்ஸ் பாட்'டாக மாநிலம் மாறி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகள் வருகை அமைந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு பயணிகள் வருகையில் பெரும் முன்னேற்றம் எற்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான ஒன்பது மாதங்களில் உள்நாட்டைச் சேர்ந்த 1,80,29,553, வெளிநாடுகளை சேர்ந்த 5,67,117 என மொத்தம் 1,85,96,670 பயணிகள் வருகை தந்து சாதனையை ஏற்படுத்தியது. இதே கால அளவில் 2024யை விட 13.06 இது சதவீதம் அதிகமாகும்.

உலக அளவில் சுற்றுலாவை சந்தைப்படுத்தி, பல்வேறு சுற்றுலா கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தியதால் பயணிகள் வருகை அதிகரித்தது. சாலைகளின் கட்டமைப்புகள் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக கொச்சி,  தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு உள்ளது. மத்திய அரசின் ரூ.378 கோடி நிதியில் இருவழி சாலையாக அமைக்கப்பட்ட சாலை, பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு இடையே கடந்து செல்லும் ரம்யமான அழகை ரசிப்பதற்கு என பயணிகள் வந்து செல்கின்றனர்.

Read Entire Article