சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும் சிஎஸ்கேவுக்கு நல்ல எதிர்காலம் நன்றாக இருப்பதாக சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே vs பஞ்சாப்:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது, என்ன தான் இந்த சீசன் சென்னை அணிக்கு மோசமாக போனாலும் சென்னை சில இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்தது.

தோனியை கவர்ந்த பிரெவிஸ்:

குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக வந்த பிரெவிஸ் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்தாலும் சென்னை கேப்டன் தோனியை கவர்ந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 48/3 என்ற நிலையில் பேட்டிங் செய்ய வந்து முக்கியமான 32 ரன்கள் எடுத்தார், மேலும் சாம் கரனுடன் 78 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பேட்டிங் மட்டும் இல்லாமல் அவர் இரு திறமையான பீல்டரும் ஆவார், மேலும் ஷ்ரேயாஸ் ஐயரை அவுட் செய்ய பவுண்டரியில் ஒரு அற்புதமான கேட்சை எடுத்து தனது திறமையை நிரூபித்தார்.

WHAT. A. CATCH 🔥

An absolute stunner from Dewald Brevis at the boundary😍

Excellent awareness from him 🫡

Updates ▶ https://t.co/eXWTTv7Xhd #TATAIPL | #CSKvPBKS | @ChennaiIPL pic.twitter.com/CjZgjdEvUQ

— IndianPremierLeague (@IPL) April 30, 2025

ஒட்டுமொத்தமாக, இரண்டு போட்டிகளில், பிரெவிஸ் இதுவரை 145.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 74 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் இந்த சீசனின் தொடக்கத்தில் எந்த நோக்கமும் இல்லாத சிஎஸ்கே அணிக்கு மிகவும் தேவையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். போட்டிக்குப் பிறகு பிரேவிஸ் பற்றி பேசிய தோனி, 22 வயதான அவரை அணிக்கு மிடில் ஓவர்களில் உத்வேகம் அளித்ததற்காகப் பாராட்டினார், அதே நேரத்தில் அவரை ஒரு சொத்து என்று அழைத்தார்.

MS Dhoni said "Brevis is an asset going ahead". pic.twitter.com/81Lr2Ul4yf

— Johns. (@CricCrazyJohns) April 30, 2025

"இவர் மிடில் ஆர்டரில் அளிக்கும் மொமண்டம் அணிக்கு உதவுகிறது. அவர் ஒரு சிறந்த பீல்டரும் கூட, அவருக்கு நல்ல ஹிட்டிங் பவர் இருக்கிறது, மேலும் அவர் நல்ல பந்துகளை பவுண்டரிகளுக்கு அடிக்க முடியும். மேலும் அவர் நல்ல ஆற்றலைக் கொண்டு வருகிறார். அவர் விளையாடும் விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் காலங்களில் ஒரு சொத்தாக இருக்க முடியும்," என்று போட்டிக்குப் பிறகு தோனி கூறினார்.