ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் எடுத்து ஆட்டமிழந்ததை அடுத்து ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேக்ஸ்வெல் டக் அவுட்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார். இந்த டக்-அவுட் மூலம், க்ளென் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனையை முறியாடித்துள்ளார், ஐபிஎல் போட்டிகளில் இது வரை அதிக முறை டக் அவுட்டானர். இந்த சாதனை பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றவர்களின் சாதனைகளை முறியடித்தார்.

தொடர்ந்து இரண்டாவது முறை:

ஆஸ்திரேலிய நட்சத்திர ஆல்ரவுண்டர் தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்-அவுட்கள் செய்த சாதனையைப் படைத்துள்ளார், தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை முந்தி 19வது முறையாக அவுட்டானர். குறிப்பிடத்தக்க வகையில், மேக்ஸ்வெல்லின் கடைசி இரண்டு ஐபிஎல் இன்னிங்ஸ்களும் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகியுள்ளார்., இதில் ஐபிஎல் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் செய்த கடைசி ஆட்டமும் அடங்கும். மேக்ஸ்வெல்லின் 19 டக்-அவுட்களில் ஐந்து அவரது கடைசி 10 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் வந்துள்ளன.

சாய் கிஷோரிடம் விக்கெட்டை கொடுத்த மேக்ஸ்வெல்;

இந்த போட்டியில் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆட்டமிழந்த பிறகு R சாய் கிஷோரை எதிர்கொண்ட மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார், ஆனால் LBW முறையில் சிக்கினார். ரீப்ளேக்களில் பந்து ஸ்டம்புகளைத் தவறவிட்டிருக்கும் என்பது தெரியவந்தது, ஆனால் மேக்ஸ்வெல் ரிவியூ செய்யாமல் கோல்டன் டக்கிற்குப் பிறகு வெளியேறினார். இது IPL-ல் அவரது 19வது டக், அவரது 10வது கோல்டன் டக் மற்றும் போட்டி வரலாற்றில் எந்தவொரு வீரரும் எடுத்த அதிகபட்ச டக் ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்-அவுட்கள் பெற்ற வீரர்களின் பட்டியல் இங்கே:

1. க்ளென் மேக்ஸ்வெல் - 19 டக் அவுட் (KXIP, MI, PBKS, RCB) [2013-2025]
2. தினேஷ் கார்த்திக் - 18 டக் அவுட் (DD, GL, KXIP, KKR, MI, RCB) [2010-2024]
3. ரோஹித் சர்மா - 18 டக் அவுட் (டெக்கான் சார்ஜர்ஸ், MI) [2008-2025]
4. பியூஷ் சாவ்லா - 16 டக் அவுட் (KXIP, KKR, MI) [2008-2024]
5. சுனில் நரைன் - 16 டக் அவுட் (KKR) [2012-2024]
6. மன்தீப் சிங் - 15 டக் அவுட் (DC, KXIP, KKR, RCB) [2010-2023]
7. ரஷீத் கான் - 15 டக் அவுட் (GT, SRH) [2018-2024]
8. மணீஷ் பாண்டே - 14 டக் அவுட் (DC, KKR, MI, புனே வாரியர்ஸ், RCB, SRH) [2008-2023]
9. அம்பதி ராயுடு - 14 டக் அவுட் (CSK, MI) [2010-2023]
10. ஹர்பஜன் சிங் - 13 டக் அவுட் [MI 2008-2017]