வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. தற்போது மோன்தா புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. இதனால், மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மழைக்காலங்களில் வீடுகளில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. மழைக்காலங்களில் பெரும்பாலும் வீடுகளின் கூரைகள், ஓடுகளில் இருந்து தண்ணீர் ஒழுகும். இதனால், வீடுகளில் மழைநீர் ஒழுகும் வாய்ப்புள்ள இடங்களில் கவனம் செலுத்தி ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

2. வீடுகளின் சுவர்கள் மற்றம் மேற்கூரைகளில் விரிசல் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு விரிசல் இருந்தால் உடனடியாக அதை சரி செய்வது நல்லது ஆகும்.

3. மழைக்காலம் என்பதால் வீட்டைச் சுற்றி குழிகள், பள்ளங்கள் ஏதேனும் இருந்தால் அதை நிரப்பிவிடுவது நல்லது ஆகும். இதுபோன்ற பள்ளங்கள், குழிகளில் நிரம்பும் தண்ணீர்களில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உள்ளது.

4. வீட்டைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள வீணான பாத்திரங்கள், டப்பாக்கள், டயர்கள் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிடுவது நல்லது ஆகும். ஏனென்றால், இவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.

5. வீட்டைச் சுற்றி குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த குப்பைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு கால்வாய்களை ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. இதனால், தண்ணீர் செல்ல முடியாத சூழல் உண்டாகும்.

6. கதவு மற்றும் ஜன்னல் வழியாக தண்ணீர் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதால் அதை சரியாக பராமரித்துக் கொள்வது நல்லது ஆகும்.

7. மழைக்காலங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சரிபார்க்க வேண்டியது வீட்டில் உள்ள மின் இணைப்புகளையே ஆகும். ஏதேனும் சிறிய மின்சார லீக்கேஜ் இருந்தாலும் அது மிகப்பெரிய பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளில் ஏதேனும் மின்சார லீக்கேஜ் இருப்பதை உணர்ந்தால் உடனடியாக மின்வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

8. தரைகளில் கனமான தரைவிரிப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது ஆகும். மழைக்காலம் என்பதால் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.இதனால் நோய் பாதிப்பு பரவும் அபாயம் உள்ளது. இதனால், மெல்லிய தரைவிரிப்புகளை பயன்படுத்துவது நல்லது ஆகும்.

9. ஆடைகள், புத்தகங்கள், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்வது நல்லது ஆகும்.

10. வீட்டிற்குள்ளே நனைந்த பொருட்களை கொண்டு வருவதை தவிர்ப்பது நல்லது ஆகும். வெளியில் இருந்து உள்ளே வரும்போது கால்களை கழுவிவிட்டு உள்ளே வருவது நல்லது ஆகும்.

குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் உள்ள வீடுகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது ஆகும்.

மழைக்காலத்தில் வீடுகளை முறையாக பராமரிக்காவிட்டால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பாெருளாதார ரீதியாக பெரிய வேலைகளும் நமக்கு ஏற்படும் சூழலும் உண்டாகும். மேலும், வீடுகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் அதனால் ஏற்படும் தாக்கத்தால் உடல்நலக்குறைவு உண்டாகும் அபாயமும் உள்ளது. அடுத்தாண்டு பொங்கல் வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை இருக்கும் என்றே கருதப்படுகிறது.