Mohan G : கேரளா ஸ்டோரி 2 படத்தை தடை செய்ய கோரிக்கை..படத்திற்கு ஆதரவாக வந்த மோகன் ஜி

1 month ago 7
ARTICLE AD

அண்மையில் வெளியான த கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டிரெய்லரில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களை மதமாற்றம் செய்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து பெண்ணை வலுகட்டாயமாக மாட்டிறைச்சி சாப்பிட வைப்பதாகவும் இந்த டிரெய்லரில் காட்சி இடம்பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸை தடை செய்ய கோரிக்கைகள் வலுத்துள்ளன

கேரள முதலமைச்சர் விமர்சனம்

த கேரளா ஸ்டோரி 1 மற்றும் 2 ஆம் படங்களும் , மாட்டிறைச்சி சாப்பிடுவதால் மலையாளிகள் மீது இழிவான பார்வையை முன்வைக்கிறது. இதனால் இந்த படத்திற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது எங்களது உரிமை என பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த டிரெய்லருக்கு எதிர்வினையாற்றியுள்ளார். அதில் " வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' மாதிரியான ஒரு படத்தின் இன்னொரு பாகம் வெளியாவதை நாம் ஒரு எச்சரிக்கையாக பார்க்க வேண்டும்.  முதல் பாகத்தில் சொல்லப்பட்ட  வகுப்புவாதத்தை தூண்டுதலையும் அபட்டமான பொய்களை பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும். வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் அனுமதிக்கப்படுவதும் அதே நேரம் தீவிர கலை வெளிப்பாடுகள் உள்ள படங்களை புறந்தள்ளுவதும் அதிர்ச்சியளிக்கிறது. நமது நல்லிணக்க நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்." என்று பின்ராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மோகன் ஜி ஆதரவு

இப்படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் படத்தை வெளியிட தடை கோரி பல்வேறு தரப்புகளிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜி கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் " பெரிய ஸ்டார்கள் நடிக்காதவரை உண்மையைப் பேசும் படங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் " என்று பதிவிட்டுள்ளார்

Saying Truth in movies will be banned throughout India itseems unless it carries big Stars https://t.co/lQPOXdfYoI
— Mohan G Kshatriyan (@mohandreamer) February 19, 2026

Read Entire Article