MK Stalin; குடியரசு தலைவர் விவகாரம்.. புது ரூட்டில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஆட்டத்தை பாருங்க

7 months ago 10
ARTICLE AD

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக உதகைக்கு சென்றுள்ளார். அங்கு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் குடியரசு தலைவர் ஆளுநர் விவகாரத்தில் கேள்வி எழுப்பியது குறித்து பதிலளித்துள்ளார்.

கால நிர்ணயம் விவகாரம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் முடிவில், மாநில அரசுகள் தங்கள் ஒப்புதலுக்காக அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:

இதற்கிடையில் , ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் மூலமாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசை கண்டிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், “பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக் ஆஅளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அரசியலைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சி இது. மசோக்காளுக்கு ஒப்புதல் தராமல் முடக்குவதை சட்டப்பூர்வம் ஆக்க பாஜக முயற்சிக்கிறதா? பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கப் பார்க்கிறதா மத்திய அரசு?” என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பு:

இந்த நிலையில் இன்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் முதல் ஸ்டாலின் நடைப்பயிற்சி செய்தார். நடைப்பயிற்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஆளுநர் விவகாரத்தில் குடியரசு தலைவர் விளக்கம் கேட்டுள்ளார் என்பதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது, இதற்கு பதிலளித்த அவர் “பிற மாநில முதலமைச்சர்களிடமும், முக்கிய தலைவர்களிடமும் இந்த விவகாரம் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகார போக்கை கடைபிடித்து கொண்டிருக்கிறது”  என்றார்.

2036 வரை திமுக ஆட்சி தான்:

இதையடுத்து 2026 மட்டுமல்ல 2031, 2036 தேர்தல்களிலும் திராவிட மாடல் ஆட்சியே நிலைத்து நிற்கும்” என தெரிவித்தார். மேலும், அவரிடம் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதாக கூறியுள்ளாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அவர், “அது அவருடைய கருத்து” என்றார்.

ஊட்டியில் முதல்வர்:

உதகையில் 5 நாள்  சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார், அங்கு அவர் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று 44 யானைபாகன்களுக்காக கட்டப்பட்ட அரசு குடியிருப்பு கட்டங்களை திறந்து வைத்தார். இதுமட்டுமில்லாம மே 15 ஆம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் உலக முழுவதும் பிரபலமடைந்த மலர் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

Read Entire Article