திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக விரைவிலேயே சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ.,வாக வருகை தருவார் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலினின் தேர்தல் தோல்வி

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தவெக அரியணை ஏறியது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். ஒரு தேர்தலில் ஆளும் கட்சியாக இருப்பவர்கள் தோல்வி கண்டு எதிர்க்கட்சியாக மாறுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும் இம்முறை தமிழக அரசியல் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது. அதாவது முதல்முறையாக களம் கண்டு தவெக ஆட்சியைப் பிடித்தது. திமுகவுக்கு இரண்டாமிடமும், அதிமுகவுக்கு மூன்றாமிடமும் தான் கிடைத்தது. குறிப்பாக இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் ஆட்டம் கண்டது.

முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தன் சொந்த தொகுதியாக கொளத்தூரில் தோற்றார். அவருடன் சேர்த்து திமுகவில் அமைச்சராக இருந்த 16 பேர் தோல்வியை தழுவினர். மு.க.ஸ்டாலினின் தோல்வியை திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

உசுப்பேற்றி விட்ட முதல்வர் விஜய்

இந்த நிலையில் கடந்த ஜூன் 23ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.,க்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் அதிருப்தியடைந்த முதலமைச்சர் தாறுமாறாக திமுகவை விமர்சித்தார். குறிப்பாக வழக்கமான தனது ஸ்டைலில் குட்டிக்கதை ஒன்றை சொல்லி அப்பாவை காணோம் என மு.க.ஸ்டாலினை பற்றி பேச திமுக டென்ஷனாகி விட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை திமுக இழுத்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் வெடித்துள்ளது.

Also Read: TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!

திமுக தலைமைக்கு பறந்த கோரிக்கை

இதனிடையே புதுக்கோட்டையில் திமுக விவசாயத் தொழிலாளர் அணித் துணைத் தலைவர் த.சந்திரசேகரனின் தாயார் பிச்சையம்மாள் அம்மையார் திருவுருவ பட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசிய கே.என்.நேரு, சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து, எங்க உங்க அப்பாவை காணோம் என கேட்கிறார். அவர் சீக்கிரமா சட்டப்பேரவைக்கு வருவாரு.. அது உறுதி.. நேற்று வரை கட்சிக்காரன் எல்லாம் அமைதியா இருந்தாங்க.. ஆனால் விஜய் பேசுனதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சிக்காரன் எல்லாரும் கொதிச்சிட்டாங்க” என பேசியுள்ளார். இதனால் காலியாக உள்ள திருச்சி கிழக்கில் நடக்கும் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்டாலினை திமுகவினர் வலியுறுத்திய நிலையில் அவர் மறுத்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.