ஒவ்வொரு பூத்திலும், 350 வாக்குகள் டார்க்கெட்டாக வைக்கவேண்டும். 2கோடி 50 லட்சம் மேல் வாங்க வேண்டும் அது உங்களின் பொறுப்பு என திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று (14) திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைப்பெற்று வரும் நிலையில், இதில், அதிமுக, முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், அதிமுகவில் இருந்து விலகி, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திருவிடந்தை தந்த உற்சாகம் திருப்பதூரில் இரட்டிப்பாகிறது. அடுத்ததடுத்து திமுக ஆட்சி தான் மக்கள் சொல்வது மகிழ்ச்சியை தருகிறது, ஆனால் வடக்கு மண்டலத்தின் வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டும் என்றார்.

திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்

2024 நாடளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி அடைந்தோம் மக்களில் எல்லா கோரிக்கையும் தீர்த்து வைத்துள்ளோம், 2019 தேர்தல் முதல் வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. பல சதிகளை முறையடித்த வெற்றி எந்த டிரென்ட் இருந்தாலும் தமிழகத்தின் டிரென்ட் பிளாக் ரெட் தான், வரும் தேர்தலில் வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியை பிடிப்போம், திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்இது நம்பிக்கையில் சொல்கின்றேன், மீண்டும் உதய சூரியன் ஆட்சி உறுதி.அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசும் வெற்றி 2026 ஆக இருக்க வேண்டும்.ஒவ்வொரு தொகுதியும் திமுக கோட்டை என்றார்.

டார்கெட் இது தான்:

தொடர்ந்து பேசிய முதல்வர் ”ஒவ்வொரு பூத்திலும், 350 வாக்குகள் டார்க்கெட்டாக வைக்கவேண்டும். 2கோடி 50 லட்சம் மேல் வாங்க வேண்டும் அது உங்களின் பொறுப்பு, என்றும் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்வது என்னுடைய பொறுப்பு என்றார். ஒவ்வொருவரும் 40 வாக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும், அப்படி செய்தால் 200 தொகுதிகள் நிச்சயம் என்றார்.

கெத்தாக நில்லுங்கள்:

நீங்கள் உங்கள் தொகுதியில் 5 முறை வாக்காளர்களை சந்திக்க வேண்டும்,சமூக வலைத்தளங்கள் வந்தாலும், மக்களிடம் நேரில் சந்திப்பது வாக்கு கேட்பது ஈடாகாதுபிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை வாக்குகேட்க வேண்டும். ரிபிட் மோடில் கேட்க வேண்டும்,2021 தேர்தலில் மக்களுக்கு சொன்னதையும் தாண்டி செய்துள்ளோம். இதனால் மக்கள் முன்பு கெத்தாக் நிற்போம். நமக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம், மக்களிடம் பணிவும், மரியாதையாக அனுக வேண்டும். வாக்குப்பெட்டி சீல் வைக்கும் வரை இருக்க வேண்டும். கழக ஆட்சி வந்தால் தான் சுயமரியாதை ஆட்சி வரும் என மனதில் பதியவேண்டும் என்றார்.