தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கைக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேசை கைது செய்ததன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி விடலாம் என்று ஆளும் அரசு நினைப்பதாக விமர்சித்துள்ளார்.

"த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது"

தன் மீதான குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்படி எதிர்கொள்வார் எனவும், கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் தவெக அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது எனவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.