MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! எலிமினேட்டரில் மிரட்டிய மும்பை? என்ன செய்யும் குஜராத்?

6 months ago 7
ARTICLE AD

ஐபிஎல் தொடரில் குவாலிஃபயர் 1ல் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், கோப்பைக்கு ஆர்சிபி அணிக்காக மல்லுகட்டப்போவது யார்? என்ற கேள்விக்கு மும்பை, குஜராத், பஞ்சாப் அணிகள் களமிறங்கியுள்ளன.

எலிமினேட்டர்:

குவாலிஃபயர் 2ல் பஞ்சாப்புடன் ஆடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா -ஜானி பார்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினர்.

பார்ஸ்டோ சரவெடி:

ஆட்டத்தை தொடங்கியது முதலே இருவரும் அதிரடியாகவே ஆடினர். ஏனென்றால் இந்த போட்டியில் தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை உண்டாகும். ஓவருக்கு 12 ரன்கள் வீதம் இருவரும் விளாசினர்.  பார்ஸ்டோ பவுண்டரிம், சிக்ஸருமாக விளாசினார். அபாரமாக ஆடி அரைசதத்தை நெருங்கிய ஜானி பார்ஸ்டோ சாய் கிஷோர் சுழலில் அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இதனால், மும்பையின் ரன்வேகம் குறையவே இல்லை. ரோகித் - சூர்யா ஜோடி அபாரமாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்களை கடந்து 150 ரன்களை நெருங்கியது. சூர்யா பட்டாசாய் வெடித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது ரன்வேட்டையை தனியாக நடத்திக் கொண்டிருந்தார்.

பட்டையை கிளப்பிய ரோகித்:

அரைசதம் கடந்தும் ரோகித்சர்மா பட்டையை கிளப்பினார்.  சூர்யகுமார் யாதவும் சாய் கிஷோர் சுழலில் சிக்கி அவுட்டானார். அவர் 20 பந்துகளில் 1பவுண்டரி 3 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரோகித்சர்மா தனது ரன்வேகத்தை மேலும் அதிகரித்தார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார்.

கடைசியில் தடுமாற்றம்:

அவர் 50 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் திலக் வர்மாவை சிராஜ் அவுட்டாக்கினார். அவர் 11 பந்துகளில் 3 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் சற்று ரன்வேகம் குறைந்தது.

பாண்டயா தாண்டவம்:

நமன்தீர் அதிரடி காட்ட முயற்சித்த உடனே பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். ஆனாலும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். கடைசி ஓவரை கோட்சி பதற்றத்துடன் வீசியதால் ஒயிட்கள் ஏராளமான வந்தது. இதனால் 9 பந்துகளை வீசினார். இதில் 3 சிக்ஸர் வந்ததால் மும்பை அணி குஜராத்திற்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 3 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்தார்.

கோட்ஸி 3 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்தார். சிராஜ் 4 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

Read Entire Article