MI vs CSK: சிக்கிய சிஎஸ்கே.. ரோகித்-சூர்யா காட்டடி! சம்பவம் செய்த பல்தான்ஸ்.. மும்பை அபார வெற்றி

8 months ago 11
ARTICLE AD

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது.

சென்னை 176:

மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்தது, தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர், ரவீந்திரா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அறிமுக வீரர் மாத்ரே அதிரடியாக விளையாடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஷேக் ரசீத் 19 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி அடுத்த சில ஓவர்களுக்கு ரன் அடிக்க முடியாமல் திணறியது, 11 ஓவருக்கு பிறகு தான் சென்னை அணி அதிரடியாக ஆடத்தொடங்கியது. சென்னை தங்கள் இறுதி 9 ஓவர்களில் 103 ரன்களை எடுத்தது, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ரோகித் அதிரடி:

177 ரன்கள் என்கிற இழக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தனர், குறிப்பாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோகித் சென்னை அணியின் பந்துவீச்சை பின்னியெடுத்தார், மறுமுனையில் ரிக்கல் நல்ல தொடக்கம் கொடுத்த மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு இந்த சீசனில் முதல் 50 விக்கெட் பார்ட்னர்சிப்பை அமைத்தது. ரவீந்திரா ஜடேஜாவின் ஓவரில் ரிக்கல்டன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

சூர்யா-ரோகித் சம்பவம்:

அடுத்த சூர்யக்குமார் யாதவ் வந்தது முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார், ஒரு ஒரு ஓவருக்கும் தலா ஒரு சிக்ஸ் அல்லது பவுண்டரியை மும்பை அணி பேட்ஸ்மென்கள் அடித்துக்கொண்டே இருந்தனர், சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி பல பவுலிங் மாற்றங்களை செய்தும் சென்னை அணிக்கு பலன் கிடைக்கவில்லை, இதற்கிடையில் ரோகித் சர்மா அடித்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் தனது அரைசதத்தை கடந்தார்.

மும்பை வெற்றி:

தொடர்ந்து தங்களது வாணவேடிக்கையை தொடர்ந்த இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹாட்ரிக் வெற்றிக்கு அழைத்து சென்றனர், மும்பை அணி 15.4 ஓவரில் சென்னை நிர்ணயித்த இலக்கை சுலபமாக அடைந்தது, ரோகித் சர்மா 46 பந்துகளில் 76 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர், இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article