MG ZS EV Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் MG நிறுவனத்தின் ZS மின்சார கார் மாடல்களின், திருத்தப்பட்ட விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அதிரடியாக விலையை குறைத்த MG நிறுவனம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டு தொடக்கத்தில் MG நிறுவனம் ZS EV கார் மாடல்களின் விலையை உயர்த்தியது. அதன்படி, டாப் வேரியண்டின் விலை ரூ.26.63 லட்சத்தை எட்டியது. அதேநேரம், எண்ட்ரி லெவல் வேரியண்டானது எந்த திருத்தத்தையும் பெறாமல் ரூ.19 லட்சத்திலேயே தொடர்ந்தது. இந்நிலையில், வெறும் 5 மாதங்களிலேயே MG நிறுவனம் ZS EV கார் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதுவும் ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது சுமார் 23 சதவிகிதம் வரையிலான விலை குறைப்பு நடவடிக்கையை MG நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Budget Cars: டாக்ஸிலாம் வேண்டாம்.. ரூ.5 லட்சத்துகே சொந்த கார் - 6 ஏர் பேக்குகள், லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ், 7 கலர்

ZS EV - எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை குறைப்பு?

MG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ள, திருத்தப்பட்ட விலைப்பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதில் 50.3 KWh பேட்டரி திறன் கொண்ட ZS EV காரின் எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வேரியண்ட்

பழைய விலை

விலை குறைப்பு

புதிய விலை

எக்சிகியூடிவ்

ரூ.18,98,000

ரூ.99,000

ரூ.17,99,000

எக்சைட் ப்ரோ

ரூ.20,47,800

ரூ.1,98,000

ரூ.18,49,800

எக்ஸ்க்ளூசிவ் பிளஸ்

ரூ.25,14,800

ரூ.5,65,000

ரூ.19,49,800

எக்ஸ்க்ளூசிவ் பிளஸ் ஐவோரி

ரூ.25,34,800

ரூ.5,85,000

ரூ.19,49,800

எசென்ஸ்

ரூ.26,43,800

ரூ.5,94,000

ரூ.20,49,800

எசென்ஸ் ஐவோரி

ரூ.26,63,800

ரூ.6,14,000

ரூ.20,49,800

ZS EV - கூடுதல் சலுகைகள்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் அறிமுகமான முதல் முழுமையான மின்சார இண்டர்நெட் எஸ்யுவி ஆன ZS EV மாடலின், 2023 மற்றும் 2024 யூனிட்கள் இன்னும் டீலர்களிடம் கைவசம் உள்ளன. அவற்றின் மீது விலை குறைப்போடு சேர்த்து கூடுதலாக பல்வேறு சலுகைகளும் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், விலைக்குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் மீது எந்த சலுகையும் நடைமுறையில் இல்லை. இந்திய சந்தையில் அறிமுகமாக ஆறாண்டுகள் பூர்த்தி செய்வதை ஒட்டி, இந்த அதிரடியான சலுகைகளை எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரானது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நெக்சான் EV, மஹிந்திரா XUV400 EV மற்றும் BYD Atto 3 ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

ZS EV - பேட்டரி விவரங்கள்:

ZS EV கார் மாடலில் இடம்பெற்றுள்ள 50.3 KWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 461 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 பேர் பயணிக்கும் அளவிலான இடவசதி கொண்ட இந்த காரில் இடம்பெற்றுள்ள பேட்டரிக்கு, 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிமீ தூரம் வரையில் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. நிலையான மேக்னெட் சின்க்ரோனஸ் மோட்டார் மூலம், 174.33bhp மற்றும் 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய திறனை கொண்டுள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 60 நிமிடங்களில் இந்த பேட்டரி 0 முதல் 80 சதவிகிதத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

ZS EV - தொழில்நுட்ப அம்சங்கள்:

முற்றிலும் மின்சார எஸ்யுவி ஆன ZS EV கார் மாடல் பனரோமிக் சன்ரூஃப், 25.7 செமீ ஹெச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் 75 கனெக்டட் அம்சங்களை கொண்டுள்ளன, டிஜிட்டல் கீ, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், டர்ன் இண்டிகேட்டர்கள் டிஆர்ல்களுடன் இணைக்கப்பட்டு இருப்பது, ரியர் டிஸ்க் பிரேக், அலெக்ட்ரானிகல்லி ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் க்ரீப் மோட் போன்ற அம்சங்களும் ZS EV கார் மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

ZS EV - பாதுகாப்பு அம்சங்கள்:

லெவல் 2 ADAS, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் உட்பட வலுவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, பாதுகாப்பு சோதனைகளில் 5 ஸ்டார்களையும் பெற்றுள்ளது. கிளேஸ் ரெட், அரோரா சில்வர், ஸ்டார்ரி பிளாக், கேண்டி ஒயிட் மற்றும் கிரீன் வித் பிளாக் ரூஃப் ஆகிய 5 வண்ண விருப்பங்களில் ZS EV கார் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் அத்தனை அம்சங்களும், தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்த ZS EV கார் மாடல் தற்போது ரூ.6 லட்சம் வரையிலான குறைந்த விலையில் கிடைப்பது பொதுமக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த காரின் விற்பனையும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.