Mettur Dam: மேட்டூர் அணை இன்றைய நிலவரம் ; டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு!

3 months ago 5
ARTICLE AD

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18,000 கன அடியாக சரிந்தது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் நேற்று முன்தினம் 6வது முறையாக நிரம்பியது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது. இதனால் அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8-வது நாளாக 120அடியாக நீடிக்கிறது. நீர்வரத்து விநாடிக்கு 18,800 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 6,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று 8 வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் நீடிக்கிறது.

ஒகேனக்கல் நிலவரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக தொடர்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6மணி நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க 10 நாளாக தடை தொடர்கிறது.

Read Entire Article