Mettur Dam Water Level: மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்வு! நீர்வரத்து சரிவு: விவசாயிகள் கவலை!

4 months ago 4
ARTICLE AD

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியாக இருந்த நிலையில் இன்று 84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 73,654 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 72,731 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் மூலமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி என டெல்டா உள்பட 11 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்கி வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பின. இதனால் காவிரி​யில் உபரிநீர் திறக்​கப்​பட்​டு, மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 4 முறை நிரம்​பியது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 25ல் மேட்டூர் அணை, நடப்பாண்டில், 40 முறை நிரம்பியது. பின் கடந்த, 3ல், அணை நீர்மட்டம், 119.98 அடியாக சரிந்தது. நேற்று முன் தினம் காலை, வினாடிக்கு, 7,591 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து 14,753 கன அடியாகவும், நேற்று  17,906 கனஅடியாகவும் அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா, கால்வாய் 16,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாசனத்துக்கு, திறப்பை விட வரத்து அதிகரிப்பால், நேற்று முன்தினம் இரவு, 118.72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், 4 நாட்களுக்கு பின் நேற்று  118.83 அடியாக உயர்ந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து ள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக வந்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை நில வரப்படி 20 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Read Entire Article