Meena as Child Artist: "ரஜினி முதல் மம்மூட்டி வரை" குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்த படங்கள் இத்தனையா?

1 year ago 7
ARTICLE AD

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று நடிகைகளாக வலம் வரும் எத்தனையோ பேரை இந்த திரையுலகம் கண்டுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஹீரோயின் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடிகர்களுடன் நடித்து பின்னர் அவர்களுக்கு ஹீரோயினாகவும் நடித்துள்ளார் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி கண்ணழகி மீனா தான்.

குழந்தை நட்சத்திரமாக மாறிய மீனா:

சிவாஜி, ரஜினிகாந்த் படங்களில் எல்லாம் குழந்தை நட்சத்திரமாக பார்த்துள்ளோம். ஆனால் அவர்களை தாண்டி பல மொழிகளில் பல நடிகர்களுடனும் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பதை அவரே நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா நடித்தது இன்றளவும் பரவலாக பேசப்படுகிறது. அதுவே  மக்கள் மனதில் பதிந்தும் போனது. இப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

அது தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களிலும் பல ஹீரோக்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மீனா. ஆனால் எந்தெந்த நட்சத்திரங்களுடன் நடித்தார் என்ற தகவல் இது வரையில் பெரிய அளவில் வெளிவரவில்லை. மீனா கலந்து கொண்ட நேர்காணலில் இது குறித்து பேசி இருந்தார்.

நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல், பறவையின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், மனிஷிகோ சரித்ரா, சுமங்கலி, சிரிபுரம் மோனகாடு, கோடு ட்ராச்சு உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மீனா.

இத்தனை படங்களா?

1984ம் ஆண்டு  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படமான 'யாத்கார்' படத்தில் அவரின் மகளாக நடிகை மீனா நடித்துள்ளார். அதே போல் 1984ம் ஆண்டு வெளியான 'திருப்பம்' மற்றும் 1983ம் ஆண்டு வெளியான 'சுமங்கலி' படத்தில் பிரபுவுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் படத்தில் கூட பேபி ஆர்டிஸ்டாக நடித்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான பாலகிருஷ்ணாவின் சூப்பர் ஹிட் படமான 'டிஸ்கோ டான்சர்' படத்திலும் மலையாளத்தில் 'ஒரு கொச்சுகத ஆறும் பராயத்த கதா' படத்தில் மம்மூட்டி உடனும் பேபி ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் மீனா.

இதில் மிகவும் சிறப்பானது என்னவென்றால் இந்த ஹீரோக்கள் அனைவரின் ஜோடியாகவும் மீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர வேறு பல பிரபலமான நடிகர்களுடனும் குழந்தையாக இருக்கும் போதே நடித்துள்ளார் என்றாலும் 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தை மட்டும் அனைவரும் நினைவில் வைத்து இருக்கிறார்கள். இந்த தகவல் சோசியல்  மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் அதே அழகும், இளமையும் கொண்ட பதுமையாக மீனா வலம் வருகிறார். அவரின் குழந்தைத்தனமான பேச்சு இன்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Read Entire Article