Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (24.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

சென்னையில் விரைவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்.. வந்தது செம்ம அப்டேட்!

அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் பாலையூர், துணைமின் நிலையத்தில் 24.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பாலையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, கோமல், தேரழுந்தூர், நச்சினார்குடி, மருத்தூர், வடமட்டம், கோனேரிராஜபுரம், கரைகண்டம், ஸ்ரீகண்டபுரம், சிவனாகரம், வைகல், மாந்தை, கங்காதரபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What is Nipah Virus: அச்சுறுத்தும் நிபா: நிபா வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள், பரவும் முறை, தடுப்பது எப்படி?

அதேபோன்று சீர்காழி கோட்டத்தில் எதிர் வரும் 24.09.2024 (செவ்வாய்கிழமை) அன்று வைத்தீஸ்வரன்கோவில் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை 110/33/11 கி.வோ. வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தொரிவிக்கப்பட்டுள்ளது.

TN Rain Updates:உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

Arvind Kejriwal: ”டெல்லியில் வாழ சொந்தமாக வீடுகூட கிடையாது” .! RSSக்கு 5 கேள்விகளை அடுக்கிய கெஜ்ரிவால்.!