மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (03.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின் பராமரிப்பு பணி

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?

மின் வாரிய செய்திக் குறிப்பு

அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்ட உதவி செயற் பொறியாளர் விஜயபாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; திருவெண்காடு துணை மின்நிலையத்தில் நாளை 03.10.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் திருவெண்காடு துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இடங்களில் நாளை மின்விநியோகம் இருக்காது.

October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருவெண்காடு, மேலையூர், மணிக்கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகிரி, திருவாலி, மேலசாலை, மங்கைமடம், அண்ணன்பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டா பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?