Mayiladuthurai Power Shutdown (01.10.2026) : மாதத்தின் முதல் நாளே மின் தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

4 weeks ago 5
ARTICLE AD

சீர்காழி கோட்டத்தில் வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணைமின் நிலையங்களில் இன்றைய தினம் அக்டோபர் 1-ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அக்டோபர் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர மற்றும் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பல முக்கியப் பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் வடக்கு சீர்காழி உதவி செயற்பொறியாளர் C. அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின்கட்டமைப்பைச் சீரமைக்கவும், தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மின்வாரியம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெறும் உயரழுத்த மின்பாதைகள்

மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 110/33-11KV வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம் மற்றும் 33/11KV அரசூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும்,

1. 11KV சீர்காழி நகர் - II உயரழுத்த மின்பாதை

2. 11KV மகேந்திரபள்ளி உயரழுத்த மின்பாதை

3. 11KV மாதிரவேளூர் உயரழுத்த மின்பாதை

ஆகிய மூன்று முக்கிய உயரழுத்த மின்பாதைகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்

மேற்கண்ட உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் சீர்காழி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப்புறப் பகுதிகள் முற்றிலும் மின்தடையைச் சந்திக்கும். மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு.

நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகள்

தென்பாதி, சபரிநகர், கற்பகம் நகர், தட்சிணாமூர்த்தி நகர், புதிய பேருந்து நிலையப் பகுதி, அரசு மருத்துவமனை சாலை (G.H. ரோடு), பிரசித்தி பெற்ற சட்டநாதர் ணகோயிலின் நான்கு வீதிகள் மற்றும் கீழ்தென்பாதி.

சுற்றுவட்டாரக் கிராமங்கள்

ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், புளியந்துறை, வேட்டாத்தங்கரை, காட்டூர், மகேந்திரபள்ளி, அரசூர், புத்தூர், ஆனந்தகூத்தன், சோதியக்குடி, சிதம்பரநாதபுரம், கீரங்குடி, மாதிரவேளூர், பூங்குடி.

மேற்கண்ட பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்

மின்நிறுத்தம் செய்யப்படும் நேரத்தில் மின்பாதைகள் மற்றும் மின்மாற்றிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் தங்களது அன்றாட அத்தியாவசியத் தேவைகளான குடிநீர் சேமிப்பு, மின்சாதனப் பயன்பாடுகள் போன்றவற்றை முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் மின்நிறுத்தமானது தற்போதைய மின்கட்டமைப்பு நிலைமை மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும், பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின்விநியோகம் சீர்செய்யப்படும் என்றும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாறுதலுக்கு உட்பட்டது

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article