May 1 : உழைப்பாளர் தினம் , அஜித் பிறந்தநாள்...3 தரமான படங்கள்...மே 1 உங்க பிளான் என்ன ?

7 months ago 5
ARTICLE AD

மே 1

உலகம் முழுவதும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர்களுக்கான தினமாக கொண்டாடப்படுகிறது. 18 முதல் 20 மணி நேரம் தொழிற்சாலைகளில் வேலை செய்துவந்த உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு முதலாளிகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்களை நினைவுபடுத்தும் விதமாகவும். உழைக்கும் மக்களே ஒரு நாட்டின் அடிப்படை சக்திகள் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அஜித் பிறந்தநாள்

இதே உழைப்பாளர் தினத்தில் தான் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளும் வருகிறது. ஆண்டுதோறும் அஜித் ரசிகர்கள் இந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருபக்கம்  அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றுள்ளது. இன்னொரு பக்கம் இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்துள்ளது. மறுபக்கம் சர்வதேச கார் பந்தையரங்களில் அஜித் ரேஸிங் குழுவிற்கு கிடைத்துள்ள வரவேற்பு. இந்த மே 1 அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டம் தான்.

மே 1 வெளியாகும் படங்கள்

மே 1 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கியமான படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்து வருகிறார். சூர்யாவின் முந்தைய படம் கங்குவா ஏமாற்றத்தை அளித்த நிலையில் ரெட்ரோ படம் சூர்யாவுக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்

ஹிட் 3

தெலுங்கில் நானி நடித்துள்ள ஹிட் 3 திரைப்படமும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று.சைலேஷ் கொலனு இப்படத்தை இயக்கியிருக்கிறார். கே.ஜி.எஃப் புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யோகி பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. படத்திற்கு நாலா பக்கமிருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்

Read Entire Article