தமிழகத்தில் சுகாதாரத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிராமங்களில் உள்ள மக்களுக்கும் சுகாதார மையங்களை அமைத்து வருகிறது. மேலும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய வகையில் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்கள் நீடித்து வந்தது.

இந்த நிலையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் மகப்பேறு சலுகை சட்டத்தின்படி அதிகபட்சமாக 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான உத்தரவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வு வாரிய செவிலியர்கள் அதிகாரமளிப்பு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர் செவிலியர்களுக்கும் மகப்பேறு சலுகை சட்டத்தின்படி 270 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் மகப்பேறு சலுகை சட்டத்தின்படி அதிகபட்சமாக 26 வாரங்கள் ஊதியத்தோடு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுப்பு குழந்தை பிறப்பு மற்றும் குழந்தையை பராமரிப்பதற்கான உண்மையான விடுப்பு காலத்திற்கு வழங்கப்படும்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளார்.