இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்கள் கார்களுக்கு மாதந்தோறும் தள்ளுபடி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?

செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர சலுகையை மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு என்னென்ன சலுகை? என்பதை கீழே காணலாம்.

1. Maruti S-Presso - ரூபாய் 37 ஆயிரத்து 500

2. Maruti Alto K10 - ரூபாய 52 ஆயிரத்து 500

3. Maruti Tour H1 - ரூபாய் 50 ஆயிரம்

4. Maruti Celerio - ரூபாய் 42 ஆயிரத்து 500

5. Maruti WagonR - ரூபாய் 47 ஆயிரத்து 500

6. Maruti Tour H3 - ரூபாய் 70 ஆயிரம்

7. Maruti Eeco - ரூபாய் 42 ஆயிரத்து 500

8. Maruti Tour V - ரூபாய் 35 ஆயிரம்

9. Maruti Swift - ரூபாய் 45 ஆயிரம்

10. Maruti Tour S - ரூபாய் 25 ஆயிரம்

11. Maruti Victoris - ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம்

இதுதான் விவரம்:

நாட்டிலே விலை குறைந்த கார்களில் ஒன்றான Maruti S-Presso காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது.

Alto K10 காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைக்கு ஓட்டும் கார்களுக்கும் தள்ளுபடி:

வாடகை காராக பயன்படுத்தும் Tour H1 ரொக்கத் தள்ளுபடியாக ரூபபாய் 25 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. Celerio காருக்கு ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகியின் மிகவும் புகழ்பெற்ற காரான WagonR காருக்கு ரொக்கமாக ரூபாய் 20 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மிகவும் புகழ்பெற்ற வாடகை காரான Tour H3 காருக்கு ரொக்கமாக ரூபாய் 45 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Maruti Swift காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் போனசாக ரூபாய் 15 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.