கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் மனம் நெகிழ்ந்து தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

வரவேற்பைப் பெற்ற டோரதி படம்

பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படைப்பாக “டோரதி” படம் வெளியாகியுள்ளது. சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ், சௌந்தரராஜா, முத்துக்குமார், கஜராஜ், திருநங்கை ஜீவா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். டோரதி படம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்... @ilaiyaraaja @karthiksubbaraj

— Mari Selvaraj (@mari_selvaraj) October 7, 2026

ஆரம்பத்தில் இப்படம் தன்பாலின ஈர்ப்பாளர்களின் கதை என நெகட்டிவாக விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் மூன்றாம் பாலினத்தவரான திருநர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. படம் பார்த்த பலரும் இந்த மனதை கனக்க செய்வதுடன் கண்ணீரையும் வரவழைப்பதாக பாராட்டியுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று இப்படம் குறித்து ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

மாரி செல்வராஜ் நெகிழ்ச்சிப் பதிவு

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்” என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.