மஞ்சு வாரியர்

மலையாளத்தில் பிரபல நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கிய அஜித்தின் துணிவு படத்தில் நடித்தார். தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளா மஞ்சு வாரியர். அடுத்தபடியாக எச்.வினோத் இயக்கவிருக்கும் தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி 69 படத்தில் மஞ்சு வாரியர்

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மஞ்சு வாரியர் இயக்குநர் எச்.வினோத் உடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பேசினார். " துணிவு படத்தில் எச்.வினோத் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ஏதாவது ஒரு காட்சியில் நான் இன்னொரு டேக் கேட்டால் இந்த காட்சிக்கு இவ்வளவு போதும் நீங்கள் நடிப்பதற்கு நான் வேற ஒரு கதை தருகிறேன் என்று சொல்வார்" என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

எச் வினோத் அடுத்தபடியாக விஜயின் தளபதி 69 படத்தை இயக்கவிருக்கிறார். கே.வி என் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

#HVinoth to #ManjuWarrier : #Thunivu maari padathuku indha performance podhum. Neenga nalla nadikka naan vera padam tharen 🤭😄👍pic.twitter.com/9Wh9huqzx2

— VCD (@VCDtweets) September 29, 2024

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி , ரக்‌ஷன் உள்ளிட்டவகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் படிக்க : Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?