Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்

3 months ago 10
ARTICLE AD

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தவெக அரசிற்கு ஆதரவு அளிப்பதால், கூட்டணியில் இணைந்ததாக பொருள் இல்லை என்று கூறினார். அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி-யும் மாநிலத் தலைவருமான மாணிக்கம் தாகூர், ஆட்சிக்கு ஆதரவு தந்து உள்ளே வந்துவிட்ட பிறகு, வேறு மாதிரி பேசுவது வெட்டி வேலை என்று விமர்சித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் கூறியது என்ன.?

திருமாவளவனுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைய ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக ஆகியவை, அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன என்றும், அரசு அமைய ஆதரவு அளிப்பது ஆதரவு நிலை என்றும், அமைச்சரவையில் இடம்பெறுவது தோழமை நிலை என்றும், அடுத்த நிலை கூட்டணி அமைத்து பெயர் சூட்டும் நிலை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சரவையில் இம்பெற்றுவிட்டாலே தவெக கூட்டணியில் விசிகவும் ஒரு பகுதிதான் என்றம், கூட்டணி தொடர்பாக திருமாவளவன் வார்த்தைகளில் விளையாட வேண்டாம், குழப்பமும் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதோடு, ஆட்சிக்கு ஆதரவு தந்து உள்ளே வந்துவிட்ட பின், வேறு மாதிரி பேசுவது, அதாவது, லெப்ட் எடுத்த பின் ரைட் டர்ன் பற்றி பேசுவது வெட்டி வேலை என்றும் விமர்சித்துள்ளார்.

தவெக தலைமையில் நல்ல கூட்டணி அரசு அமைந்துள்ளது என்றும், இந்த ஆட்சியை சோஃபா மாடல் ஆட்சி என்று எதை சொன்னாலும், தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

திருமாவளவன் பேசியது என்ன.?

சென்னையில் நேற்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபின் பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், ரீல்ஸ் போடுவதில் அமைச்சர்கள் மட்டுமின்றி, அதிகாரிகள் தொடங்கி, நாடு முழுவதும், உலக அளவிலும் வழக்கமாக மாறி இருப்பதாக கூறினார். மேலும், ஒருவர் மட்டும் ரீல்ஸ் போடுவதாக கூற முடியாது என்றும், சமூக ஊடகங்கள் வலிமை பெற்றுள்ள இந்த காலகட்டத்தில், ஒவ்வொருவரின் அசைவுகளையும் பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக மாறி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அது பொதுவெளியில் ஒழுக்கக்கேடாக இருந்ததைத்தான் தான் சுட்டிக்காட்டுவதாகவும், அதனை அமைச்சர்கள் உள்வாங்கிக் கொண்டு, அவ்வாறு செய்வதை தவிர்ப்பார்கள் என்று கருதுவதாகவும் கூறினார். அதோடு, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் தாங்கள் சேர்ந்ததால், கூட்டணியில் இணைந்ததாக பொருள் இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழகத்தில், தவெக தலைமையிலான கூட்டணி அரசில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிப்பதோடு, அக்கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அமைச்சராக உள்ளார். இந்த சூழ்நிலையில், திமுக உடன் நட்பு தொடர்வதாகவும், தவெக கூட்டணியில் தாங்கன் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article