Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?

1 month ago 2
ARTICLE AD

இ்ந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Mahindra Scorpio Lifestyler:

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் முக்கியமான கார்களில் ஒன்று Mahindra Scorpio. இந்த காரிலே சற்று மாற்றத்துடன் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள கார் Mahindra Scorpio Lifestyler. உலக சந்தையில் இந்த வடிவிலான கார்கள் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், இசுசு நிறுவன காரின் தோற்றத்தில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் இந்தியாவில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 19.79 லட்சம் ஆகும்.

2. Mahindra Vision S:

மஹிந்திரா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Mahindra Vision S. காம்பேக்ட் எஸ்யூவி காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் பவர்ட்ரெயின்ஸ் வசதி உள்ளது. இந்த காரும் அடுத்தாண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. Mahindra BE.07:

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் முக்கியமான கார்களில் ஒன்று Mahindra BE.07. இவர்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள மின்சார கார் Mahindra BE.07. இந்த காரும் நல்ல மைலேஜ் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த காரில் 60 முதல் 80 கிலோவாட் பேட்டரி பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அடுத்தாண்டு அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஹாரியர் இவி மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7க்கு எதிராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. New-Generation Mahindra XUV 3XO:

மஹிந்திரா நிறுவனம் வெற்றிகரமான கார் Mahindra XUV 3XO. இந்த காரின் அடுத்த தலைமுறை காராக அறிமுகமாக உள்ளது New-Generation Mahindra XUV 3XO. இந்த கார் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மோட்களில் அறிமுகமாக உள்ளது. இது மட்டுமின்றி எலக்ட்ரிக் வேரியண்டாகவும் இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த காரும் அடுத்தாண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் ஏற்கனவே இந்தியாவில் அசத்தி வரும் நிலையில், இந்த கார்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த கார்கள் இந்திய சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பையும், மாற்றத்தையும் பெரும் என்று கருதப்படுகிறது.

Read Entire Article