Mahindra Thar Armada 5-Door: புது லுக்கில் அசத்தும் தார் அர்மாடா 5 டோர் - நெருங்கும் வெளியிடு, கசிந்த புகைப்படங்கள்..

1 year ago 7
ARTICLE AD

Mahindra Thar Armada 5-Door: மஹிந்திரா நிறுவனத்தின் தார் அர்மாடா 5 டோர் கார், 3 ரோட் காரை போன்று இல்லாமல் புதுவிதமான தோற்றத்தை கொண்டுள்ளது.

மஹிந்திரா தார் அர்மாடா 5 டோர்:

புதிய தார் அர்மடா 5 டோரின் தோற்றம் தொடர்பான முதல் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இது 3 டோர் எடிஷனிலிருந்து மாறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளது. 3-டோர் தார் உடன் ஒப்பிடும்போது, ​​5 டோர் அர்மடா ஒரு வட்ட வடிவ LED புரொஜெக்டர் முகப்பு விளக்கு அமைப்பு மற்றும் ஒரு வித்தியாசமான கிரில்லைப் பெறுகிறது. கிரில் 5 டோர் எடிஷனைக் தனித்து காட்டுகிறது மற்றும் இரட்டை ஸ்லாட்டுகளுடன் வேறுபட்ட பேட்டனை கொண்டுள்ளது. 3-டோர் தார் எளிமையான 7-ஸ்லாட் கிரில்லை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காரின் சைட் வியூ தொடர்பான் புகைப்படமானது,  கண்ணாடியில் இருக்கும் கேமராவுடன் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதல் கதவுகள் ஆகியவற்றைக் காட்டுகிறது. அதாவது 360 டிகிரி கேமரா இடம்பெற்று உள்ளதை உறுதிப்படுத்துகிறது. முன் கதவுகளை விட சிறியதாக இருக்கும் அதே நேரத்தில் பின்புற கதவு கைப்பிடியின் இருப்பிடமும் தனித்துவமாக காட்சியளிக்கிறது.

இதையும் படியுங்கள்: Virat Kohl: ”புகழும், அதிகாரமும் கோலியை மாற்றிவிட்டது” - விராட் இப்படிப்பட்டவரா? என ரசிகர்கள் ஷாக்

தார் 5 டோரின் இதர வடிவமைப்பு விவரங்கள்:

5-டோர் தார் அர்மடாவ 3 டோர் எடிஷனுடன் ஒப்பிடும்போது, ​பிரீமியம் கேபின் மற்றும் பல அம்சங்களைப் பெற்று 5 டோர் அதிக பிரீமியமாகத் தெரிகிறது. அதோடு,  3 டோர் எடிஷனை விட அதிக வேறுபாடுகளை கொண்டுள்ளது. 10.25-இன்ச் திரை மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் சமீபத்திய கனெக்டட் கார் தொழில்நுட்பத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள 360-டிகிரி கேமரா மற்றும் ADAS தொழில்நுட்பத்துடன் சன்ரூஃப் வசதியும் இருக்கும்.

டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட தார் 3 டோர்ல் உள்ள,  இன்ஜின் விருப்பங்களை 5 டோர் எடிஷனும் பகிர்ந்து கொள்கிறது. இரண்டு பவர் ட்ரெயின் வேரியண்ட்களிலும் 4 வீல் டிரைவ் பவர்டிரெய்ன் ஸ்டேண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகிறது. அதேநேரம்,  ரியர் வீல் டிரைவ் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அர்மாடா கார் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. 3 டோர் தார் கார் மாடலை விட, 5 டோர் எடிஷனின் சற்று அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியாக கருதப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் Scorpio N ஐ விட தார் 5-கதவு அர்மடா கூடுதல் அம்சங்களை கொண்டிருப்பதால் அதன் விலை அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article