சில வருடங்களுக்கு முன்பு அதிகம் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்தியாவில் கார்களை உபயோகப்படுத்தி வந்தனர். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு கார் என்பது எட்டக்கனியாகவே இருந்தது. அதன்பிறகு, நகரங்கள் வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களும் கார்களை வாங்க வேண்டும் என்ற காரணத்தினால் பல முன்னணி கார் நிறுவனங்கள், சிறிய குடும்பங்களின் வசதிகேற்ப குறைந்த பட்ஜெட்டில் கார்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கின. இதில், மஹிந்திரா நிறுவனமும் ஒன்றாகும்.

மஹிந்திரா இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. மஹிந்திரா XUV 3XO:

மஹிந்திரா XUV 3XO கார் ரூபாய் 7.28 லட்சத்தில் தொடங்குகிறது. 1197 cc - 1498 cc உடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார் லிட்டருக்கு 20.6 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது. 5 இருக்கைகள் கொண்ட இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்டது.

2. மஹிந்திரா பொலிரோ:

மஹிந்திரா பொலிரோ கார் ரூபாய் 7.99 லட்சத்தில் கிடைக்கிறது. 1493 சிசியுடன் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார் லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் (பழைய மாடல்களுக்கு) மைலேஜ் கொடுக்கும்.

3. மஹிந்திரா பொலிரோ நியோ:

மஹிந்திரா பொலிரோ நியோ கார் N4 வகை ரூபாய் 8.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. சில நகரங்களில் சில மாடல்கள் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன. 1493 சிசியுடன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 17.29 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது.