<p>அரசுப் பள்ளிகளில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசிய கருத்துக்களும், அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்த சூழலில், மகாவிஷ்ணு தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது. </p>
<p>அவர் மீது திருவொற்றியூர் காவல்நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் பலரும் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாகவும், எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் வீடியோ வெளியிட்டிருந்தார். <br /><br />இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகளின் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. </p>