Maha Shivaratri: 2026 மகா சிவராத்திரி எப்போது? - எந்த நாளில் நாம் விரதம் இருக்க வேண்டும்?

2 months ago 8
ARTICLE AD

இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விஷேச தினமாக பார்க்கப்படுகிறது. வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 14 திதிகள், அமாவாசை, பௌர்ணமி ஆகியவை கணக்கில் கொண்டு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் ஏராளமான வழிபாட்டு கடவுள்கள் உள்ளது. ஆனால் சிவபெருமான் முழு முதற்கடவுளாக அறியப்படுகிறது. சிவம் என்றால் இந்து சமயத்தில் பூரணத்துவம், மங்களகரமானது என்பது பொருளாகும். இத்தகைய சிவனுக்கு ஐப்பசி அன்னாபிஷேகம், மாத சிவராத்திரி, மார்கழி திருவாதிரை என ஏராளமான விசேஷ நாட்கள் உள்ளது.

மஹா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அனுசரிக்கப்படும் சிவராத்திரியில் நாம் விரதம் இருந்து வழிபட்டால் அதன்மூலம் மன அமைதி, நாம் செய்த முற்பிறவி பாவங்கள் நீங்குதல் போன்றவை நடக்கும் என்பது ஐதீகமாகும். ஆனால் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியானது மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மத மக்களால் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. பிரம்மனின் அகந்தையை அழிக்கும் பொருட்டு பரம்பொருளான ஈசன் சக்தியுடன் இணைந்து அடி முடி அறியாத ஜோதிப்பிழம்பாக தோன்றிய நாளே சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் உலகம் முழுவதுமுள்ள சிவாலயங்களில் சிவராத்திரி பண்டிகை, வழிபாடு ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அன்று மாலை தொடங்கி மறுநாள் காலை வரையிலான 12 மணி நேரம் 4 கால விரதம், வழிபாடு ஆகியவை கடைபிடிக்கப்படும்.  இந்த நான்கு சாம காலங்களிலும் சிவ பூஜை மேற்கொண்டு விரதம் இருந்தால் வாழ்க்கையின் மிகப்பெரிய அளவில் நற்பலன்கள் கிடைக்கும். 4வது கால விரதம் முடிந்ததும், அதிகாலை புனித நீராடி சிவனை வழிபாடு செய்த பிறகு உணவெடுத்து கொள்ளலாம்.

2026 மஹா சிவராத்திரி எப்போது?

ஆங்கில நாட்காட்டியின்படி பார்த்தால் ஒவ்வொரு ஆண்டு மாத சிவராத்திரி பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும். ஆண்களுக்காக ஒரு ராத்திரி சிவராத்திரியாகவும், பெண்களுக்கு 9 நாட்கள் நவராத்திரி எனவும் ஆன்மிகத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. அப்படியான சிவராத்திரியானது 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி வருகிறது.

அதன்படி பிப்ரவரி 15ம் தேதி மாலை 5.51 மணிக்கு தேய்பிறை சதுர்த்தசி திதியானது தொடங்குகிறது. இந்த திதி பிப்ரவரி 16ம் தேதி மாலை 6.26 மணிக்கு நிறைவடைகிறது. அதன்பின் அமாவாசை திதி தொடங்கும். மஹா சிவராத்திரி வழிபாடு இரவு முழுவதும் கண் விழித்து செய்யப்பட வேண்டியது என்பதால் பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை புனித நீராடி விரதம் தொடங்கலாம்.  இந்த விரதம் மற்றும் வழிபாட்டை கோயிலிலோ அல்லது வீட்டிலிலோ செய்யலாம்.

Read Entire Article