Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!

1 month ago 4
ARTICLE AD

தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - மருத்துவர் சரவணன் வேதனை,

தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால், பெண்கள் மட்டுமல்லாது பெண் குழந்தைகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உள்ளது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டாக்டர் சரவணன்

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 34 வது வார்டு தாசில்தார் குறுக்கு தெரு மற்றும் முதலியார் காலனி பகுதிகளில், அதிமுக மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சரவணன் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை ஒட்டி, கோலப் போட்டிகள் நடைபெற்றது. இந்த கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவர் சரவணன்  ஹேண்ட் பேக் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மக்களிடம் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார், அக்குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார்.

குழந்தைகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்...,” சந்திப்பில், தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால், பெண்கள் மட்டுமல்லாது பெண் குழந்தைகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்ட விரைவில் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவியேற்பார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2014ம் ஆண்டு  இறுதியில் ஒரு சிலிண்டரின் விலை 1100க்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது உள்ள  பாஜக ஆட்சியில் 948 ரூபாய் தான் உள்ளது. மாணவர்கள் முன்னேற்றத்திற்காக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் லேப்டாப் வழங்கினார்கள். ஆனால் தற்போது உள்ள திமுக ஓட்டுக்காக மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இது வெட்கக்கேடு, இவ்வாறு கூறினார்கள், இந்நிகழ்வில் 34 ஆவது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் போஸ், வார்டு பிரதிநிதி வடிவேல், நிர்வாகிகள் மாரியப்பன், ராஜசேகர், வார்டு இணைச் செயலாளர் மரகதம், இளைஞர் அணி செயலாளர் பாலமுருகன் மற்றும் கழகத்தின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்,

Read Entire Article