மதுரை தேமுதிக நிர்வாகி தேர்தல் பணி குழு செயலாளர் அழகர்சாமியின் மகன் திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சுதீஷ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்...,”கேப்டன் கையில் கை குழந்தையாக இருந்து மணமகனாக மாறி இருக்கும் தீபக்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மதுரைக்கு வந்துவிட்டால் தலைவர் குழந்தையாக மாறிவிடுவார்.

2011 வரலாறை 2026 இல் நிகழ்த்துவோம்.

கேப்டன் எம்ஜிஆரின் தொண்டர், ரசிகர், விசுவாசி. சங்க காலத்தில் எங்க அப்பா அம்மா இருவரும் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்பார்கள். எம்ஜிஆர் வேற கருப்பு எம்ஜிஆர் வேற இல்லை. 2011 ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கூட்டணியால் அமைந்தார்கள். சில துரோகிகள் சூழ்ச்சியால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணியை உடைப்பதற்காகவே சில துரோகிகளை உருவாக்கினார்கள். எடப்பாடியாரும், நானும் எத்தனை துரோகங்கள் சூழ்ச்சிகள் வந்தாலும் அத்தனையும் வீழ்த்தி 2011 வரலாறை 2026 இல் நிகழ்த்துவோம்.

விஜய பிரபாகர் தோற்கவில்லை

விருதுநகரில் விஜய பிரபாகர் சூழ்ச்சி செய்யப்பட்டு துரோகிகளால் வீழ்த்தப்பட்டார் அவர் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டார். திருப்பரங்குன்றத்தில் இன்று கந்த சஷ்டி மூன்றாம் நாள். கேப்டன் ஒன்றாக மதித்த அவ்வளவு வேலை இருந்தாலும் கந்த சஷ்டி விரதம் நிச்சயமாக கடைபிடிப்பார். 2026 இல் சரித்திரத்தையும், சகாப்த்தத்தையும் பெற்றே தீருவோம். 200 தொகுதி அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றியை பெறுவோம் என்று கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:

விஜய் கடந்து வர வேண்டிய பாதைகள் ஏராளமாக உள்ளது. எங்கள் கட்சியிலேயே தேசியமும், திராவிடமும் உள்ளது. கேப்டன் தமிழை நேசித்தவர். தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காமல் சரித்திரம் படைத்துள்ளார். தமிழ் மொழியை காப்போம் பிற மொழியை கற்போம் என்றுதான் கேப்டன் கூறியுள்ளார். தேசியத்தில் தான் திராவிடம் உள்ளது திராவிடத்தில் தான் தமிழகம் உள்ளது.

திமுக மூன்றாண்டுகள சாதனையை பாருங்கள் என்று முதல்வர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு:

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றியுள்ளார்கள்? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்ல பெயர் வாங்கினால் தான் திமுக இருக்க முடியும்.

தெலுங்கர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறியது குறித்த கேள்வி:

கஸ்தூரி கூறியதற்கு நான் பதில் சொல்ல தேவை இல்லை.

மாநாட்டுக்கு முன்பும் பின்பும் சீமான் விஜய் குறித்து பேசியதற்கு:

அவர் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை. ஏன் தம்பி என்று சொன்னார், ஏன் லாரியில் அடிபட்டு சாவேன் என்று சொன்னார் என அவரிடம் தான் கேட்க வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்க வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது.

கேப்டன் மாநாட்டின் முறியடித்தார் விஜய் என்ற கேள்விக்கு

உண்மையை தான் சொல்லி உள்ளார்கள். அதில் எதுவும் தவறு இல்லை. 2005-ல் இதே திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஆதரவுடன் 25 லட்சம் தொண்டர்கள் மத்தியில் கழகத்தின் பெயரை அறிவித்து நடத்தை சரித்திரம் படைத்தார் கேப்டன். இதுதான் உண்மை அதுதான் நாங்களும் சொல்கிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lucky Bhaskar Twitter Review : தீபாவளி ரேஸில் தாக்குபிடிப்பாரா துல்கர் சல்மான்...லக்கி பாஸ்கர் விமர்சனம் சொல்வது என்ன