Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !

1 week ago 2
ARTICLE AD

மதுரை மாநகராட்சியின் அவலம் ;  குப்பை தொட்டிகள் இல்லாத நிலையில், குப்பைகளாக மாறும் சாலைகள். சேலையில் குப்பைகளை அள்ளும் தூய்மை பணியாளர்கள். உபகரணம் இல்லாத நிலையில் கைகளால் குப்பைகளை அகற்றும் பரிதாபம்.

தூய்மை நகரமாக மாறுமா மதுரை

மதுரை மாநகர் வக்பு கல்லூரி சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரியை சுற்றியுள்ள குடியிருப்பு  பகுதிகளிலிருந்து வீசப்பட்ட குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி கல்லூரி மாணவ மாணவியர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை விஜயன்பன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியரின் தகவல்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார்...," மாமதுரையை தூய்மை நகராக மாற்ற வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு மாநகராட்சி மட்டுமல்லாமல் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம். சட்டமன்ற உறுப்பினர் என்னை நேரில் சந்தித்துபோது வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கக்கூடிய தூய்மை பணிகள் தொடர்பானவற்றை கூறினார். தமிழக அரசு சார்பில் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உதவியுடன் ஒரு மாபெரும் தூய்மை பணிகளை மதுரை மாநகராட்சியில் தொடங்க வேண்டும் என்ற கூறினார். அதன்படி சட்டமன்ற உறுப்பினர், 200 பேருக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மாணாக்கர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என அனைத்து நபர்களும் இணைந்து மாபெரும் தூய்மை பணியினை தொடங்கியுள்ளோம். மாநகரை தூய்மையாக வைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம் தூய்மை பணி என்பது ஒரு நாள் ஒரு நேரம் நடப்பது அல்ல ; எவ்வளவு குப்பைகளை அகற்றுவோமோ ; அதே அளவிற்கு  குப்பை மீண்டும் வரும் அதனை தொடர்ந்து தூய்மைபடுத்த வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.

சீக்குவந்தே சாகனும் போல

இந்நிலையில் களநிலவரங்களை விசாரித்தோம்... மதுரை மாநகராட்சியில் 100வார்டுகள் உள்ள நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் போதிய குப்பை தொட்டிகள் வைக்காத நிலையில் சாலைகள் முழுவதும் பொதுமக்கள் குப்பைகளை வீசி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. குப்பை தொட்டிகளை சுற்றி குவிந்துகிடக்கும் குப்பைகளால் துர்நாற்ற பகுதிகளாக மாறுகிறது குப்பை தொட்டியே எடுத்துட்டே போக மாட்றாங்க. இத முதலமைச்சர்ட சொல்லுங்க நாங்கதான்  சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை தூய்மை பணியாளர்கள் வெளிப்படுத்தினார்கள்.

Read Entire Article