கீழடியில் உலக தமிழர் ஒற்றுமை பொங்கல்.43 நாடுகளில் இருந்து சங்கமமான வெளிநாடு தமிழர்கள்.

உலக தமிழர் ஒற்றுமை பொங்கல் விழாவானது நடைபெற்றது.

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் உலக தமிழர்களின் ஒற்றுமை பொங்கல் நடைபெற்ற நிலையில் 43 நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கமமாகி பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து விழா கொண்டாடினர். தமிழர்களின் மரபை உலகத்திற்கு ஆதாரத்துடன் எடுத்துக்காட்டியது கீழடி அகழாய்வு. அப்பேற்பட்ட கீழடி மண்ணில் அரசு சார்பில் பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் சார்பில் ரைட்ஸ் ஆப் சங்கமம் மாமதுரை என்கிற தலைப்பில் உலக தமிழர் ஒற்றுமை பொங்கல் விழாவானது நடைபெற்றது.

கலாச்சார பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் அமெரிக்கா, இலங்கை, உள்ளிட்ட 43 நாடுகளில் வாழக்கூடிய வெளிநாடு வாழ் தமிழர்கள் ஒன்றினைந்து அங்கு சங்கமமாகி நமது பாரம்பரிய உடை அனிந்து பழமை மாறாமல் நம்முடைய கரகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தியதுடன் கபடி, சிலம்பம் என நம்முடைய பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் ஜல்லிக்கட்டு காளைகளையும் வைத்து கலாச்சார பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத ஒற்றுமையை வலியுறுத்தும்விதமாக அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.