Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (30.09.2024) அன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.

- Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!

தமிழ்நாடு மின் வாரிய மதுரை மேற்கு பெருநகர் செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு

இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை மேற்கு பெருநகர செயற்பொறியாளர் சி.லதா தெரிவித்தது.

மின் தடை - மதுரையில் எங்கு தெரியுமா?

30.09.2024 (திங்கள்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 03.00 வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 110/33-11 KV அவனியாபுரம் துணைமின் நிலையங்களில் உள்ள M.M.C Colony உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றையதினம் கீழ்கண்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

MMC காலனி, CAS நகர், PCM சொக்கு பிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, பைபாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள் பிரியங்கா அவென்யு, அர்ஜீனாநகர், க்ளாட்வே கிரீன் சிட்டி, VOC தெரு, பாராசக்திநகர், காவேரிநகர் 1 முதல் 7 வரை, ஆறுமுகநகர் 1, 2 வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம்நகர், MM.சிட்டி ஆகிய பகுதிகளாகும்” என தெரிவித்துள்ளார்.

இதைப்படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘திருடுனவரு பைக்க திரும்ப குடுத்தா ரூ.10 ஆயிரம் தரேன்’- தாய் வாங்கிக் கொடுத்த பைக், பரிதவிப்பில் மகன்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்