Madurai NTK Murder: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நாதக நிர்வாகி வெட்டிக் கொலை:

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பாலசுப்ரமணியன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மதுரை வடக்குத்தொகுதி துணைச்செயலாளராக இருந்த பால சுப்ரமணியனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்றனர். அதிகாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அதுவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகிலேயே இந்த கொலை செய்யப்பட்டது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.