தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவு.

ம.தி.மு.க. தலைவர் வைகோ நியூட்ரினோ

ம.தி.மு.க. தலைவர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என 2015-ம் ஆண்டில் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்து உள்ளன. மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில்

கூறியிருந்தார்.

- களைகட்டும் விநாயகர் சதுர்த்தி! பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி

உத்தரவும் பிறப்பிக்க இயலாது

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது,

அப்போது மத்திய அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையிடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையுடன் உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிக ள் உத்தரவிட்டனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - GOAT Box Office Prediction: விஜயின் பாக்ஸ் ஆஃபிஸ் வேட்டை..! தி கோட் படத்தின் முதல் நாள் வசூலே ரூ.100 கோடி? இலக்கு என்ன?