Madurai HC இந்த விசயத்தில்.. தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது-  நீதிபதி பாராட்டு

7 months ago 9
ARTICLE AD

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த  தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முஹமது ஜின்னா மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலருக்கு நீதிபதி பாராட்டு.

தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கான அரசாக செயல்பட்டு வருவதாக நீதிபதி பாராட்டு.

அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தமிழ்செல்வன். கடந்த 2018ல் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடந்தது.  இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தனது பள்ளி மாணவிகளை ஆசிரியர் தமிழ்செல்வன் அழைத்து வந்திருந்தார். அப்போது  மாணவி ஒருவருக்கு  பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி  புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் தமிழ் செல்வனை கைது தண்டனையும் பெற்றுத் தந்தனர்.

நீதிபதி விசாரணை

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது மாணவிகளிடம் பாலியல் சீன்டலில்  ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்ற வேண்டும் இது குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி மாணவிகளின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் மற்றும் அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

ஆலோசனைகளும் தற்காப்பு கலைகள்

அந்த அறிக்கையில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் போது கண்டிப்பாக பெண் ஆசிரியை இருக்க வேண்டும் என்றும் அவர்களது பெற்றோர்கள் உடன் அழைத்துச் செல்வது மற்றும் விளையாட்டு திடல் மாணவிகள் தங்கும் அறை கழிப்பறைகள் உடை மாற்றும் அறைகள் இவைகள் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு மைதானங்களும் பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் இந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் மாணவிகள் தனியாக மறைவிடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது விளையாட்டுப் போட்டி முடிந்த பின்பு அல்லது முன்னதாகவோ வெளிப்புறங்களுக்கு செல்லும்போது உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் மேலும் மாணவிகளுக்கு பாலியல் குறித்த ஆலோசனைகளும் தற்காப்பு கலைகள் போன்றவற்றும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும் என விரும்பியது.

மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது  என அறிக்கையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி தமிழ்நாடு அரசு சமூக நீதி கடைப்பிடித்து வருகிறது. பெண்கள் மாணவிகள் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது நான் அறிவேன். இருந்த போதும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்பது ஏற்கத்தக்கது அல்ல சம்பந்தப்பட்ட மாணவி பாலியல் குற்றச்சாட்டுக்கு பின் பள்ளி படிப்பை பாதியில் முடித்து திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளார். எனவே தான் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தமிழக அரசு மாணவிகளின் பாதுகாப்பு குறித்து உரிய சட்ட  வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வகுக்க வேண்டும் என விரும்பியது.

ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தார்

அதன் அடிப்படையில் இந்த வாகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அரசுக்கு உரிய நேரத்தில் இதை கொண்டு சென்று பல்வேறு வழிகாட்டுதல்களை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை நீதிமன்றத்திற்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது எனவே இந்த விவகாரத்தில் அரசுக்கு உடனடியாக எடுத்துச் சென்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிய தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னாவிற்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கும் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தார்.

Read Entire Article