Madurai ; 5ஆயிரம் இல்ல 50000 அறிவித்தாலும் தி.மு.க., ஆட்சி முடிந்துவிடும் - டி.டி.வி.தினகரன் பேட்டி !

2 months ago 6
ARTICLE AD

அம்மாவின் தொண்டர்களை ஒன்றிணைப்போம் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று பல வருடங்களாக சொன்னது உண்மை என்றால்  தங்களுக்கு என்ன பலன் என்பதை பார்க்காமல் அம்மாவின் ஆட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் முகத்திரை கிழிந்து விடும்*

டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியன் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டின் கிரகப்பிரசவத்தில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது..

திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வர வேண்டுமென நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு:  என்ன சொன்னார் நான் உண்மையாகவே கவனிக்கவில்லை பொதுவா யாருமே தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்கணும் நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசக்கூடியவர் அல்ல தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியல்

மகளிர் உரிமைத்தொகை 5000 வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு:

5000 இல்லை 50,000 அறிவித்தாலும் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். மக்களை ஏமாற்றுகின்ற வகையில் கிட்டத்தட்ட ஆட்சி முடிகிற தருவாயில் உள்ளது. விவசாயிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், அனைத்து துறை இளைஞர்கள் வேலைவாய்ப்பு கூலிப்படைகள் தான் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பள்ளிக்கூடங்களில் கிடைக்கின்ற அளவுக்கு இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் காவலர்களுக்கே.. பேச்சை நிறுத்திவிட்டு புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் ஒளிபரப்பு சத்தம் அதிகமாக இருந்ததால் சவுண்ட கம்மி பண்ண சொல்லுங்கப்பா என்றார். இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எங்கும் ஊழல் எளிதிலும் ஊழல் அப்படி சூழல்தான் உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை வாங்கி விடலாம் என்று திமுக நினைக்கிறாது அது முடியாது. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்டோம் என்று பயம் அவர்களுக்கு அறிவிப்பிலே தெரிகிறது. மாதம் ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை. பழங்குடியின ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கூட மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்கிற அவசர கதியில் இந்த அறிவிப்புகள் வந்துள்ளது.

தேர்தல் பயத்தில் தோல்வி பயத்தில் மகளிர் உரிமைத்தொகை

தேர்தல் பயத்தில் தோல்வி பயத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கி இருப்பது மடைமாற்றி இருப்பது உண்மையாகவே கண்டிக்கத்தக்கது. இது ஒன்னும் முத்துவேலன் கருணாநிதி ஸ்டாலின் பணம் இல்லை. அரசின் பணத்தை கொடுக்கிறார்கள் கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் செய்திருக்கிறார்கள்.

மோடி வரும் வேளையில் புதிய கட்சிகள் இணைவதற்கு வாய்ப்புள்ளதாக குறித்த கேள்விக்கு:

தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக உள்ளது புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

ஓபிஎஸ் வருவாரா குறித்த கேள்விக்கு:

ஓபிஎஸ் தான் முடிவு எடுக்க வேண்டும். அம்மாவுடைய ஆட்சி அமைய வேண்டும் என்று சொல்பவர்கள் அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியில் ஆதரவளிப்பார்கள் அப்படி இல்லையென்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்து விடும். கடந்த 7,8 ஆண்டுகளாக அம்மா கட்சியை ஒன்றிணைப்போம் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணை வேண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க பாடுபடுவோம் என்று யாரெல்லாம் சொன்னார்களோ பிரிந்து கிடந்த அம்மா தொண்டர்கள் எல்லாம் ஓரணியில் திரண்டு இருக்கிறோம். இன்னும் சில பேர் வெளியில் இருப்பவர்கள் தங்களுக்கு என்ன பலன் என்பதை பார்க்காமல் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக சொல்லி வருவது உண்மை, என்றால் அதற்கு அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை புறம் தள்ளி விடுவார்கள். அம்மாவின் தொண்டர்கள் அடையாளம் கண்டு ஒதுக்கி விடுவார்கள்.

கூட்டணி குறித்து விஜய் பேசியது குறித்த கேள்விக்கு:  அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதால் எங்களுடைய எல்லோருடைய கருத்து ஆனால் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பாரா என்ற நிலவரம் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நடைபெறும் பணிபோர் பற்றி யாரும் விவாதிக்கவில்லை. எங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபம் கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்றிணைந்துள்ளோம்.

தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு:

சுமுகமான முறையில் தொகுதி பங்கீடு குறித்து கௌரமான விதத்தில் தொகுதிகளை பெற்று எங்களின் கூட்டணியில் எந்தவித குழப்பமும் வராது. கஞ்சா போதையில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க நாங்கள் அனைவரும் ஒன்று இணைந்திருக்கோம் உறுதியாக வெற்றி பெறுவோம்.

அதிகாரத்தில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு: அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது கண்டிஷன் அல்ல எங்களைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக வேண்டும் என்பது எங்களின் விருப்பம் தான் தவிர நோ கண்டிஷன்.

Read Entire Article