Madharaasi: மதராஸி டிக்கெட் முன்பதிவில் வசூலை அள்ளியதா?.. முதல் நாளே இத்தனை கோடியா?.. முழு விவரம் இதோ

3 months ago 4
ARTICLE AD
<p>இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள &nbsp;மதராஸி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வசூலைக் கடந்தது. அமரன் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.&nbsp;</p> <p>சினிராக் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழ்நாட்டில் சுமார் 362 திரையரங்குகளில் 2.2 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு, 3.73 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது. ஜெயிலர், லியோ படங்களை காட்டிலும் முன்பதிவு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புக் மை ஷோவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய செப்டம்பர் 1ம் தேதி வெறும் 16,750 டிக்கெட்டுகள் மட்டுமே புக்கிங் ஆனது. செப்டம்பர் 2ம் தேதி 29 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் ஆனது. செப்டம்பர் 3ம் தேதி 72 ஆயிரம் டிக்கெட்டுகள் என அதிரடியாக டிக்கெட் புக்கிங் உயர்ந்தது. இதுவரை ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p> <p>ஆனால், அமரன் படத்திற்கு செய்த ப்ரோமோஷன் கூட இப்படத்திற்கு செய்யவில்லை என்ற பேச்சும் பேசுபொருளாகியிருக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முந்தயை படங்களான சிக்கந்தர், அகிரா, தர்பார் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதிக ப்ரோமோஷனால் பெரிய ஹைப்பை ஏற்படுத்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் படக்குழு சைலண்டாக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. மதராஸி திரைப்படத்தை பொறுத்தவரை முதல் நாளில் தமிழ்நாட்டில் 6 முதல் 7 கோடி வரையும் வசூல் ஈட்ட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் குறைந்தது 20 முதல் 30 கோடி வரை வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை முன்பதிவில் பாதிப்பில்லை என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.</p>
Read Entire Article